பொது செய்தி

இந்தியா

ஆப்கன் கற்றுத் தந்த பாடம்; ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி : ''தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் நடந்துள்ள சம்பவங்கள் உலக நாடுகளுக்கு புதிய பாடத்தை கற்றுத் தந்துள்ளன,'' என, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.டில்லி தேசிய ராணுவக் கல்லுாரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். பாகிஸ்தான், சீனா, தலிபான், ஆப்கானிஸ்தான் பெயர்களைக்

புதுடில்லி : ''தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் நடந்துள்ள சம்பவங்கள் உலக நாடுகளுக்கு புதிய பாடத்தை கற்றுத் தந்துள்ளன,'' என, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.



latest tamil news




டில்லி தேசிய ராணுவக் கல்லுாரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். பாகிஸ்தான், சீனா, தலிபான், ஆப்கானிஸ்தான் பெயர்களைக் குறிப்பிடாமல் அவர் பேசியதாவது:வெளியில் இருந்து ஒரு அதிகார சக்தியின் தலையீடு மற்றும் பயங்கரவாதம் போன்றவற்றை கருவியாக பயன்படுத்தி ஒரு நாட்டின் கட்டமைப்பை மாற்றிவிட முடியுமா என்ற கேள்வியை சமீபத்திய நிகழ்வுகள் எழுப்பியுள்ளன.

பயங்கரவாத மத அமைப்பால் ஒரு நாட்டின் ஸ்திரதன்மையை மாற்றி அமைக்க முடியும்; இனி இது போன்ற சம்பவங்கள் தான் புதிய நடைமுறையாக இருக்கும் என்பதையும் சமீபத்திய சம்பவங்கள் காட்டியுள்ளன. இது உலக நாடுகளுக்கு புதிய படிப்பை. பயங்கரவாதத்தின் வாயிலாக பாகுபாடு காட்டி, மிரட்டி மக்களின் விருப்பத்துக்கு எதிராக செயல்பட முடியாது. எவ்வளவு தீயவை இருந்தாலும் நல்லதை வெல்ல முடியாது என்பதை உணர வேண்டும்.


latest tamil news




இந்த பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள், பயங்கரவாதத்துக்கு எதிராக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை பொறுப்புள்ள நாடுகளுக்கு சுட்டிக் காட்டியுள்ளது.நம் நாட்டின் எல்லையிலும் சில பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். இந்தியா அமைதியை விரும்பும் நாடு. மற்ற நாடுகளுடன் நட்புடன் இருக்க வேண்டும் என்பதே நம் விருப்பம்.அதே நேரத்தில் நம் இறையாண்மைக்கு, நாட்டின் பாதுகாப்புக்கு பிரச்னை என்றால், துரிதமாக உரிய பதிலடி கொடுப்போம் என்பதை உணர்த்தியுள்ளோம். பதன்கோட், கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் நடந்த சம்பவங்கள் இதற்கு உதாரணம்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
26-செப்-202114:21:01 IST Report Abuse
தமிழன் எல்லா பக்கத்து நாடுகளோடும் சண்டை... தகுதியில்லாத ராஜ்நாத்துக்கு பதவி ....அதிக பாதுகாப்பிற்காக இந்தியஒன்றிய மக்களின் பணம், உயிர் விரயம்... நாடாள தகுதியற்றவர்கள் .
Rate this:
raja - Cotonou,பெனின்
27-செப்-202111:53:24 IST Report Abuse
rajaஎல்லா பக்கத்து நாடுகளோடு சண்டை போடாம பயங்கரவாதிகளை உள்ளே புகுந்து இந்திய மக்களை கொன்று குவித்தார்கள் காங்கிரஸ் ஆட்சியில் ... அதுபோல இப்படியும் இருக்க வேண்டுமா மட தமிழா?...
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
26-செப்-202107:45:30 IST Report Abuse
அன்பு இந்தியாவிலும் சகிப்புத்தன்மை குறைந்து, ஆப்கான் போன்றுதான் மாறிவருகிறது.
Rate this:
raja - Cotonou,பெனின்
27-செப்-202111:51:43 IST Report Abuse
rajaசகிப்பு தன்மையோடு கல்வான் பள்ளத்தாக்கை விட்டு கொடுத்திடலாமா அன்பு... காங்கிரஸ் நேரு போல........
Rate this:
Cancel
யாரோ ஒருத்தன் - CHENNAI,இந்தியா
26-செப்-202105:48:35 IST Report Abuse
யாரோ ஒருத்தன் //பயங்கரவாத மத அமைப்பால் ஒரு நாட்டின் ஸ்திரதன்மையை மாற்றி அமைக்க முடியும் இனி இது போன்ற சம்பவங்கள் தான் புதிய நடைமுறையாக இருக்கும் என்பதையும் சமீபத்திய சம்பவங்கள் காட்டியுள்ளன. // மூர்க்கத்தை இந்த உலகத்தில் இருந்து ஒழித்தால் உலகமே அமைதியா இருக்கும் . இப்போ இந்த அளவு பாதுகாப்பு முறைகளும். சோதனைகளும் வந்ததே மூர்கத்தினால் தான். விமான நிலையத்துக்கு போய் பாருங்கள் 100மில்லி லிட்டருக்கு மேல் எந்த ஒரு திரவமும் கையில் எடுத்துக்கொண்டு போகமுடியாது அப்படி ஒரு கட்டுப்பாடு. எல்லாம் மூர்க்கத்தினால். எவ்வளவு கலை பொக்கிஷங்களை நாம் இழந்திருக்கிறோம். நமது சிதைந்த கோவில்களுக்கு போய்ப்பாருங்கள் , மூளியான சிலைகள், நமது முன்னோர்கள் எழுதிவைத்த பொக்கிஷங்கள் போனதுக்கு மூலகாரணம் மூர்க்கம். இனியும் நாம் தூங்கிக்கொண்டு இருந்தால் மிகப்பெரிய இழப்பை ( இல்லை முழுமையான இழப்பு, நாம் நாமாக இருக்கமாட்டோம்) சந்திக்க வேண்டிவரும். சுதந்திரத்தின் போது ஒரு இருவர் செய்த தவறு நாம் அனுபவிக்கிறோம்.
Rate this:
raja - Cotonou,பெனின்
27-செப்-202111:56:19 IST Report Abuse
rajaமூர்க்கம் மட்டும் இல்லை... ஆந்திராவில் கோயில் சிலைகளை உடைபவர்கள் யாருன்னு பாருங்க... மிஷினரியும் தான்........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X