ஆப்கன் கற்றுத் தந்த பாடம்; ராஜ்நாத் சிங் எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆப்கன் கற்றுத் தந்த பாடம்; ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (6)
Share
புதுடில்லி : ''தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் நடந்துள்ள சம்பவங்கள் உலக நாடுகளுக்கு புதிய பாடத்தை கற்றுத் தந்துள்ளன,'' என, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.டில்லி தேசிய ராணுவக் கல்லுாரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். பாகிஸ்தான், சீனா, தலிபான், ஆப்கானிஸ்தான் பெயர்களைக்

புதுடில்லி : ''தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் நடந்துள்ள சம்பவங்கள் உலக நாடுகளுக்கு புதிய பாடத்தை கற்றுத் தந்துள்ளன,'' என, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.



latest tamil news




டில்லி தேசிய ராணுவக் கல்லுாரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். பாகிஸ்தான், சீனா, தலிபான், ஆப்கானிஸ்தான் பெயர்களைக் குறிப்பிடாமல் அவர் பேசியதாவது:வெளியில் இருந்து ஒரு அதிகார சக்தியின் தலையீடு மற்றும் பயங்கரவாதம் போன்றவற்றை கருவியாக பயன்படுத்தி ஒரு நாட்டின் கட்டமைப்பை மாற்றிவிட முடியுமா என்ற கேள்வியை சமீபத்திய நிகழ்வுகள் எழுப்பியுள்ளன.

பயங்கரவாத மத அமைப்பால் ஒரு நாட்டின் ஸ்திரதன்மையை மாற்றி அமைக்க முடியும்; இனி இது போன்ற சம்பவங்கள் தான் புதிய நடைமுறையாக இருக்கும் என்பதையும் சமீபத்திய சம்பவங்கள் காட்டியுள்ளன. இது உலக நாடுகளுக்கு புதிய படிப்பை. பயங்கரவாதத்தின் வாயிலாக பாகுபாடு காட்டி, மிரட்டி மக்களின் விருப்பத்துக்கு எதிராக செயல்பட முடியாது. எவ்வளவு தீயவை இருந்தாலும் நல்லதை வெல்ல முடியாது என்பதை உணர வேண்டும்.


latest tamil news




இந்த பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள், பயங்கரவாதத்துக்கு எதிராக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை பொறுப்புள்ள நாடுகளுக்கு சுட்டிக் காட்டியுள்ளது.நம் நாட்டின் எல்லையிலும் சில பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். இந்தியா அமைதியை விரும்பும் நாடு. மற்ற நாடுகளுடன் நட்புடன் இருக்க வேண்டும் என்பதே நம் விருப்பம்.அதே நேரத்தில் நம் இறையாண்மைக்கு, நாட்டின் பாதுகாப்புக்கு பிரச்னை என்றால், துரிதமாக உரிய பதிலடி கொடுப்போம் என்பதை உணர்த்தியுள்ளோம். பதன்கோட், கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் நடந்த சம்பவங்கள் இதற்கு உதாரணம்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X