சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

'இன்னும் கொட்டுங்க...' என விரட்டும் வி.ஐ.பி.,

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
''தகுதி இல்லாத வேட்பாளர்களை அறிவிச்சுட்டான்னு, கட்சித் தலைமைக்கு, ஒரு தொண்டனின் குமுறல் என்ற தலைப்புல கடிதம் எழுதி அனுப்பியிருக்கா பா...'' என, பெஞ்ச் மேட்டரைத் தொடங்கினார் குப்பண்ணா.''தி.மு.க., தகவலா பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.''ஆமாம்... காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துல, 18 கவுன்சிலருக்கான இடங்களுக்கு ஆளுங்கட்சியில வேட்பாளர்
டீ கடை பெஞ்ச்


''தகுதி இல்லாத வேட்பாளர்களை அறிவிச்சுட்டான்னு, கட்சித் தலைமைக்கு, ஒரு தொண்டனின் குமுறல் என்ற தலைப்புல கடிதம் எழுதி அனுப்பியிருக்கா பா...'' என, பெஞ்ச் மேட்டரைத் தொடங்கினார் குப்பண்ணா.''தி.மு.க., தகவலா பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.''ஆமாம்... காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துல, 18 கவுன்சிலருக்கான இடங்களுக்கு ஆளுங்கட்சியில வேட்பாளர் அறிவிச்சா...''கட்சியில ரொம்ப வருஷமா இருக்கவாளுக்கு 'சீட்' கிடைக்கலே... 30 நாளுக்கு முன், ஜாதி சங்கத்துலேர்ந்து வெளியேறி, தி.மு.க.,வுல சேர்ந்த ஒர்த்தர்க்கு ஒன்றிய கவுன்சிலர் 'போஸ்ட்'டுக்கு சீட் குடுத்திருக்கா...''கட்சியில சேர்ந்தவரும், மாவட்ட செயலரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவாளாம்... அதான் விஷயம்...'' என முடித்தார் குப்பண்ணா.டீக்கடைக்கு வந்த சிறுமியிடம், ''சீனிவாசன் அங்கிளும், சுந்தர் அங்கிளும் உங்கப்பாவைப் பார்க்க வந்தா, நான் விசாரிச்சதா சொல்லுமா...'' என்ற அண்ணாச்சி, ''பட்டுவாடாவை ஆரம்பிச்சிட்டாவ வே...'' என, அடுத்த தகவலுக்கு வந்தார்.''உள்ளாட்சி தேர்தல் விவகாரமா பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''ஆமாம்... சென்னையை ஒட்டி இருக்கிற பரங்கிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம்தென், திருவஞ்சேரி ஊராட்சிகள், ஆளுங்கட்சியினர் ஓட்டுக்கு பணம் 'சப்ளை' பண்ண ஆரம்பிச்சிட்டாவ வே...''ராத்திரி 11:00 மணிக்கு மேல வார்டு வாரியா, கட்சி உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை வச்சு, வீடு வீடா பணத்தை குடுத்துட்டு இருக்காவ... சில இடங்களில் ஒரு ஓட்டுக்கு 7,000 ரூபாய் வரைக்கும் குடுக்காவ வே...''இதுக்கு, அந்தந்த ஊராட்சிகளின் செயலர்களும் துணையா இருக்காவ... சும்மாவே இருக்கிற பறக்கும் படையினரும், மாநில தேர்தல் அதிகாரிகளும் இதை கண்டுக்கவே இல்ல வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.''இதெல்லாம் எந்த மூலைக்கு... இன்னும் கொட்டுங்கன்னு ராஜ கம்பீரமா கேட்கிறாருங்க...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், அந்தோணிசாமி.''புரியறது... மேல சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.''தமிழகத்துல முக்கியமான துறையின் வி.ஐ.பி., தீவிரமான வசூல் வேட்டையில இறங்கிட்டாருங்க... ஏற்கனவே, அ.தி.மு.க., ஆட்சியில 'வெயிட்'டான துறைகளை கவனிச்ச, 'அனுபவம்' இருக்கிறதால, அதே கணக்கோட கல்லா பெட்டியை திறந்து வச்சிருக்காருங்க... ''இந்த துறையில, வட்டார அளவிலான அதிகாரிகள், மாதா மாதம் கப்பம் கட்டுறது தான் பெரிய அளவுல வருமானம்... மற்றபடி, துறைக்கு புதிய வாகனங்கள் வாங்குறப்ப தான், பெரிய தொகை தேறுமுங்க...''இதனால, அதிகாரிகளிடம் வி.ஐ.பி., 'இதெல்லாம் ஒரு காசா... என்னை ஏமாத்தப் பாக்குறீங்களா... இன்னும் நிறைய கொண்டாந்து கொடுங்க'ன்னு விரட்டுறாராம்... 'போக்கு இருக்கக் கூடாது; வரத்து மட்டுமே இருக்கணும்கிற இவரை திருப்திபடுத்தணும்னா, எங்கயாவது கொள்ளை அடிச்சா தான் உண்டு'ன்னு, அதிகாரிகள் அலுத்துக்குறாங்க...'' என்றார் அந்தோணிசாமி.பெஞ்சில் மேலும் சிலர் இடம் பிடிக்க, பெரியவர்கள் கிளம்பினர்.


'கட்டிங்' கேட்டு மிரட்டும் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள்!


''ஆட்சி மாறினால், இதெல்லாம் நடக்குறது சகஜம் தானே பா...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அன்வர்பாய்.''என்னன்னு விபரமா சொல்லும் வே...'' என கேட்டார் அண்ணாச்சி.''தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம், 11 தனியார் நிறுவனங்களிடம் இருந்து மது வகையையும், ஏழு நிறுவனங்களிடம் இருந்து 'பீர்' வகையையும் கொள்முதல் செய்யுது பா...''தி.மு.க.,வை சேர்ந்தவங்களும், அவங்க உறவினர்களும் மது ஆலைகள் நடத்திட்டு வராங்க பா... ''ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை அ.தி.மு.க., ஆட்சியில, சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான, 'மிடாஸ்' ஆலையில் இருந்தும்; அவர் மறைவுக்கு பின், அதிக கமிஷன் தர்ற நிறுவனங்களிடம் இருந்தும் அதிகளவில் மது வகை வாங்குனாங்க பா...''ஆட்சி மாறினதும், தி.மு.க., ஆதரவாளர்கள் நடத்துற ஆலைகளில் மட்டும் அதிகளவு மது கொள்முதல் பண்ணணும்ன்னு வாய்வழி உத்தரவு போட்டுருக்காங்களாம் பா...'' என விளக்கினார், அன்வர்பாய்.''கொடுக்கறதை கொடுத்தால் ஆட்சி மாறினாலும் பிரச்னை இல்லைங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...''நீர்வளத் துறையில முதன்மையான இடத்துல இருக்கிற அதிகாரி, அ.தி.மு.க., ஆட்சியில, முதல்வருக்கு ரொம்பவே நெருக்கமா இருந்தாருங்க...''தி.மு.க., ஆட்சி வந்ததும், அவரை இடம் மாத்துவாங்கன்னு எதிர்பார்த்தாங்க... ஆனால், அவரை அசைக்க முடியலையாமுங்க...''பொறியாளர்கள் இடமாத்துறதுல்ல, 'கல்லா' கட்டுறது இவரோட வழக்கம்... அதுல மேல்மட்டத்துக்கு கொடுக்க வேண்டிய பங்கை சரியா கொடுத்துருவாராம்ங்க...''முருகன் ஆசியோட இப்போ துறையின் முக்கிய புள்ளியா இருக்குறவரை, அந்த அதிகாரி வித்தியாசமா, 'கவர்' பண்ணிட்டாராமுங்க...''மொத்தமா, 'டிரான்ஸ்பர்' போட்டு பணம் வாங்கி கொடுத்தா முக்கிய புள்ளி மறந்துடுவார்... அதனால தினமும் மாவட்டதுக்கு ரெண்டு, மூணு டிரான்ஸ்பர் போட்டு, முக்கிய புள்ளிக்கு அடிக்கடி பணம் கொடுக்குறாராமுங்க...''இதனால் மேலிடத்து புள்ளி தினமும் பல லட்சம் ரூபாய் வசூல் மழையில நனையிறாருங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.நாயர் கடை ரேடியோவில், நான் படத்திற்காக ராமமூர்த்தி இசையில், 'அம்மனோ சாமியோ... பாடல் தற்போது ஒலிக்க இருக்கிறது...' என நெறியாளர் அறிவித்தார்.''ரியல் எஸ்டேட் தொழில் பண்றவா எல்லாம் அலறிண்டு இருக்கா ஓய்...'' என கடைசி தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.''என்ன சொல்லுதீரு...'' என கேட்டார், அண்ணாச்சி.''கொரோனா ஊரடங்கால ஒன்றரை வருஷமா ரியல் எஸ்டேட் தொழில் முடங்கி இருந்துது... ஆட்சி மாற்றம், ஊரடங்கு தளர்வு ஏற்பட்டதால தொழில் மெல்ல சூடுபிடிக்க ஆரம்பிச்சுருக்கு ஓய்...''நிலத்தை வாங்கி, வீட்டு மனைகளாக பிரிச்சு, விற்பனை பண்ண தயாராகிண்டு இருக்கா... சி.எம்.டி.ஏ., அனுமதிக்கும், கட்டணம் செலுத்தி இருக்கா ஓய்...''கட்டணம் செலுத்தினவா பட்டியலை, திருவள்ளூர் மாவட்டத்துல இருக்கற தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவாளர்கள் வாங்கியிருக்கா ஓய்...''ரியல் எஸ்டேட் தொழில் செய்றவாகிட்ட, 1 ஏக்கருக்கு 10 லட்சம் ரூபாய், 'கட்டிங்' கேட்டு தொல்லை பண்றா ஓய்...''தொழில் பண்றவா எல்லாம் புலம்பறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.நண்பர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
26-செப்-202115:42:07 IST Report Abuse
D.Ambujavalli இவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு ஸ்டேஜிலும் அழுது விட்டு கட்டும் வீடுகளை வாங்குவோர், உயிர்ப்பாயத்துடன்தான் அங்கு வாழ வேண்டும். கட்டும்போதே இடி]ந்தால் அவர்கள் உயிராவது தப்பும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X