ஹிந்து பாரம்பரிய மாதம் அக்டோபர்; அமெரிக்க மாகாணங்கள் அறிவிப்பு

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
வாஷிங்டன்-அமெரிக்காவைச் சேர்ந்த டெக்சாஸ், ஓஹியோ உள்ளிட்ட பல மாகாணங்கள் அக்டோபரை, ஹிந்து பாரம்பரிய மாதமாக அறிவித்துள்ளன. அக்டோபரில் நவராத்திரி, தசரா உட்பட பல பண்டிகைகளை ஹிந்துக்கள் கொண்டாடுகின்றனர்.மகாளய அமாவாசையும், சில சமயம் தீபாவளி பண்டிகையும் அக்.,ல் வருவது உண்டு.இத்தகைய சிறப்பு வாய்ந்த அக்டோபரை, ஹிந்து பாரம்பரிய மாதமாக அறிவிக்கக் கோரி அமெரிக்காவைச்

வாஷிங்டன்-அமெரிக்காவைச் சேர்ந்த டெக்சாஸ், ஓஹியோ உள்ளிட்ட பல மாகாணங்கள் அக்டோபரை, ஹிந்து பாரம்பரிய மாதமாக அறிவித்துள்ளன. அக்டோபரில் நவராத்திரி, தசரா உட்பட பல பண்டிகைகளை ஹிந்துக்கள் கொண்டாடுகின்றனர்.மகாளய அமாவாசையும், சில சமயம் தீபாவளி பண்டிகையும் அக்.,ல் வருவது உண்டு.



latest tamil news


இத்தகைய சிறப்பு வாய்ந்த அக்டோபரை, ஹிந்து பாரம்பரிய மாதமாக அறிவிக்கக் கோரி அமெரிக்காவைச் சேர்ந்த பல ஹிந்து அமைப்புகள், மாகாண அரசுகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தன. இதை ஏற்று டெக்சாஸ், புளோரிடா, நியூ ஜெர்சி, ஓஹியோ, மாசாசூசெட்ஸ் மாகாண அரசுகள், அக்டோபரை ஹிந்துக்களின் பாரம்பரிய மாதமாக அறிவித்து அரசாணை பிறப்பித்துள்ளன.

இது குறித்து அமெரிக்க விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அஜய் ஷா கூறியதாவது:ஹிந்து பாரம்பரிய கலாசாரத்திற்கு பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான தொன்மையும் சிறப்பும் உள்ளது.ஆனால் வெகு சிலரே ஹிந்து சனாதன தர்மத்தை அறிந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. பாரம்பரியமிக்க ஹிந்து தர்மம் மற்றும் கொள்கைகளை உலகறியச் செய்ய வேண்டிய தருணம் வந்து விட்டது.

இதையொட்டி எங்கள் அமைப்பு, இதர ஹிந்து அமைப்புகளுடன் சேர்ந்து அமெரிக்காவின் 20க்கும் மேற்பட்ட மாகாண அரசுகளுக்கு அக்டோபரை ஹிந்து பாரம்பரிய மாதமாக கொண்டாட வேண்டும் எனக் கோரி கடிதம் அனுப்பியது. இதன்படி பல மாகாணங்கள் ஹிந்து பாரம்பரிய மாதமாக அக்டோபரை அறிவித்துள்ளன. அந்த மாதம் முழுதும் கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பாட்டு, பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.


latest tamil news


ஹிந்து கலாசார பாரம்பரியத்தின் சிறப்புகளை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள இந்த நிகழ்ச்சிகள் உதவும்.மேலும், அமெரிக்கா முழுதும் ஹிந்து மாதமாக அக்டோபரை கொண்டாட அரசாணை பிறப்பிக்கும்படி அதிபர் ஜோ பைடனுக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-செப்-202122:11:04 IST Report Abuse
அருணா இங்கே இந்து மதத்திற்கும் மதத் திற்கும் தடை சொல்ல காரணம் தேடிக் கொண்டிருப்பார் திக குழுவினருடன்
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
26-செப்-202113:37:36 IST Report Abuse
J. G. Muthuraj சென்டிமென்டை தொட்டுட்டானுங்கப்பா......
Rate this:
Cancel
26-செப்-202113:27:56 IST Report Abuse
சங்கிமக்கா இந்து னு சொன்னாலே கஷ்டமாயிருக்கு..நேரம் டா சாமி..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X