பொது செய்தி

இந்தியா

அமைச்சரவை விரிவாக்கம் கேள்விக்குறி பதவி எதிர்பார்ப்பவர்கள் அதிருப்தி

Added : செப் 26, 2021
Share
Advertisement
பெங்களூரு : அமைச்சர் பதவி மீது கண் வைத்துள்ளோருக்கு, அரசு 'ஷாக்' அளித்துள்ளது. தற்போதைக்கு அமைச்சரவை விரிவாக்கம் சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக அமைச்சரவையில் தற்போது நான்கு இடங்கள் காலியாக உள்ளது. இதில் ஒரு டஜன் எம்.எல்.ஏ.,க்கள் கண் வைத்துள்ளனர்.சட்டசபை கூட்டம் முடிந்த பின், அமைச்சரவை விரிவுப்படுத்தப்படும் என, எதிர்ப்பார்த்தனர். ஆனால் இவ்விஷயத்தில்,

பெங்களூரு : அமைச்சர் பதவி மீது கண் வைத்துள்ளோருக்கு, அரசு 'ஷாக்' அளித்துள்ளது. தற்போதைக்கு அமைச்சரவை விரிவாக்கம் சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக அமைச்சரவையில் தற்போது நான்கு இடங்கள் காலியாக உள்ளது. இதில் ஒரு டஜன் எம்.எல்.ஏ.,க்கள் கண் வைத்துள்ளனர்.சட்டசபை கூட்டம் முடிந்த பின், அமைச்சரவை விரிவுப்படுத்தப்படும் என, எதிர்ப்பார்த்தனர். ஆனால் இவ்விஷயத்தில், பா.ஜ., மேலிடம் கவனம் செலுத்துவதாக தெரியவில்லை. இதற்கிடையில், பெங்களூரு மாநகராட்சி உட்பட மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தலுக்கு கட்சியை தயாராக்குவதில், மாநில தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். கட்சியை பலப்படுத்த முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும், மாநில சுற்றுப்பயணத்துக்கு தயாராகிறார்.

எனவே அமைச்சரவை விரிவாக்கத்தில் ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை. எடியூரப்பா அரசில் அமைச்சராக இருந்து, பசவராஜ் பொம்மை அரசில் நீக்கப்பட்டு, 'மாஜி' க்களான பலரும், மீண்டும் அமைச்சரவையில் இடம்பிடிக்க, கடுமையாக முயற்சிக்கின்றனர். சட்டசபை கூட்டம் முடிந்த பின் பதவி கிடைக்கும் என, கனவு கண்டவர்கள் நிராசை அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X