அவங்க எல்லாம் யாருன்னு தெரியுது! | Dinamalar

சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'அவங்க எல்லாம் யாருன்னு தெரியுது!'

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (1)
Share
ஓசூரில், கம்யூ., மாநில செயலர் முத்தரசன், நிருபர்களை சமீபத்தில் சந்தித்தார்.அவர் கூறுகையில், 'கோவில், மடம், தர்ம ஸ்தாபன நிலங்களில் பல தலைமுறைகளாக சாகுபடி செய்து வரும் விவசாயிகளின் குத்தகை பாக்கியை, தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். 'கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு, அ.தி.மு.க., ஆட்சியின்போது நிர்ணயிக்கப்பட்ட வாடகை அதிகமாக உள்ளது. இதை குறைக்க வேண்டும். 'கோவில்
பக்க வாத்தியம்

ஓசூரில், கம்யூ., மாநில செயலர் முத்தரசன், நிருபர்களை சமீபத்தில் சந்தித்தார்.அவர் கூறுகையில், 'கோவில், மடம், தர்ம ஸ்தாபன நிலங்களில் பல தலைமுறைகளாக சாகுபடி செய்து வரும் விவசாயிகளின் குத்தகை பாக்கியை, தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். 'கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு, அ.தி.மு.க., ஆட்சியின்போது நிர்ணயிக்கப்பட்ட வாடகை அதிகமாக உள்ளது. இதை குறைக்க வேண்டும்.

'கோவில் சொத்தை ஆக்கிரமித்தோர் மீது, 'குண்டர்' சட்டம் பாயும் என்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்...' என்றார்.அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'கோவில் நிலத்திற்கு குத்தகை பாக்கி கொடுக்காமல் இருக்கிறவங்க, வாடகை கொடுக்காமல், 'டிமிக்கி' கொடுக்குறவங்க, ஆக்கிரமிப்பு செய்யுறவங்க யாருன்னு இப்போ தெளிவாக புரியுது...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.


'இதுல என்ன பெருமை?'


கரூர், தான்தோன்றிமலை ஒன்றிய அலுவலகத்தில், போக்குவரத்து துறை முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க., மாவட்ட செயலருமான விஜயபாஸ்கர், நிருபர்களை சமீபத்தில் சந்தித்தார்.அவர் கூறுகையில், 'அ.தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளுக்கு பயிர் கடன், மகளிர் சுய உதவி குழு கடன் உட்பட அனைத்து கடன்களும் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் தள்ளுபடி செய்யப்பட்டன.

தற்போது, தி.மு.க., ஆட்சியில் நகை கடன் தள்ளுபடிக்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன...' என்றார்.அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'எந்த வித கட்டுப்பாடும், விசாரணையும் இன்றி கடன் தள்ளுபடி செய்ததால் தான், பல கோடி ரூபாய் மோசடி நடந்தது... லஞ்சமும், ஊழலும் கொடிக்கட்டி பறந்ததால் தான், ஆட்சியே மாறியது... அது தெரியாமல், பெருமை பேசுறாரே...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.


'இதெல்லாம் தேவையா?'

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயத்தில், தி.மு.க., சார்பில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டத்தில், வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்றார். நிருபர்களிடம் கூறுகையில், 'அ.தி.மு.க., 'மாஜி' அமைச்சர் வீரமணி, 10 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தார்; தற்போது எப்படி இருக்கிறார்... அவருக்கு வசதி வாய்ப்பு எப்படி வந்தது என, போலீசார் விசாரித்து வருகின்றனர்...' என்றார்.

அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'அ.தி.மு.க., அமைச்சர்களின் பழைய கதையை கிளறினால், பதிலுக்கு அவர்கள், ரயிலில் டிக்கெட் எடுக்க கூட வழியில்லாமல் சென்னைக்கு வந்தவர், அரசியலில் இறங்கி பல லட்சம் கோடி ரூபாய் சொத்து சேர்த்த கதையை எடுத்து விடுவர்... இதெல்லாம் தேவையா?' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X