பண மோசடி வழக்கு: மஹா., அமைச்சருக்கு 'சம்மன்'

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
மும்பை-மஹாராஷ்டிராவில் பண மோசடி வழக்கில் சிக்கி உள்ள மாநில அமைச்சர் அனில் பராபிற்கு, நேற்று இரண்டாவது முறையாக அமலாக்கத் துறையினர் 'சம்மன்' அனுப்பினர்.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு உள்துறை அமைச்சராக இருந்த, தேசியவாத காங்., கட்சியைச் சேர்ந்த அனில் தேஷ்முக் மீது லஞ்ச புகார் கூறப்பட்டது. மும்பையில்

மும்பை-மஹாராஷ்டிராவில் பண மோசடி வழக்கில் சிக்கி உள்ள மாநில அமைச்சர் அனில் பராபிற்கு, நேற்று இரண்டாவது முறையாக அமலாக்கத் துறையினர் 'சம்மன்' அனுப்பினர்.



latest tamil news


மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு உள்துறை அமைச்சராக இருந்த, தேசியவாத காங்., கட்சியைச் சேர்ந்த அனில் தேஷ்முக் மீது லஞ்ச புகார் கூறப்பட்டது. மும்பையில் உள்ள ஓட்டல்களில் இருந்து 100 கோடி ரூபாயை லஞ்சமாக வசூலித்துத் தரக்கோரி, அனில் தேஷ்முக் வலியுறுத்தியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கத் துவங்கியதை தொடர்ந்து, அமைச்சர் பதவியை தேஷ்முக் ராஜினாமா செய்தார்.

இந்த வழக்கை அமலாக்கத் துறையினரும் விசாரித்து வருகின்றனர். இதில் பணியிட மாற்ற உத்தரவை திரும்பப்பெற, போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து அனில் தேஷ்முக்கும், சிவசேனா மூத்த தலைவரும், மாநில போக்குவரத்து துறை அமைச்சருமான அனில் பராபும், 40 கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றது தெரியவந்தது.


latest tamil news


இந்த வழக்கில் நேரில் ஆஜராகக்கோரி அனில் பராபிற்கு சமீபத்தில் சம்மன் அனுப்பப்பட்டது. எனினும், தன் பணியை காரணம் காட்டி விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு பெற்றார். இந்நிலையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று மீண்டும் அனில் பராபிற்கு சம்மன் அனுப்பினர். அடுத்த வாரம் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
26-செப்-202116:39:49 IST Report Abuse
madhavan rajan இன்னும் பல கோடிகள் வாங்கி செய்யும் பணி தடைப்பட்டுவிடும் என்பதால் அவர் சம்மனுக்கு ஆஜராகவில்லை போலும்.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
26-செப்-202116:28:42 IST Report Abuse
r.sundaram அவருக்கு சம்மன் என்றால் தெரியாது, சன்மானம் என்றால் மட்டுமே தெரியும்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
26-செப்-202109:30:47 IST Report Abuse
duruvasar "கொல்லறாங்களே, கொல்லறாங்களே" படத்தை பதிய பிரிண்ட் & பிண்ணனி இசையுடன் மீண்டும் பார்க வாய்ப்பு இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X