பொது செய்தி

இந்தியா

பழிவாங்க 22 கி.மீ திரும்பி வந்த குரங்கு

Added : செப் 26, 2021
Share
Advertisement
சிக்கமகளூரு : பாம்பு 12 ஆண்டுகள் காத்திருந்து பழி வாங்கும் என கூறுவதுண்டு. ஆனால் குரங்கு ஒன்று, நபரை பழி வாங்க 22 கி.மீ., துாரம் சென்றுள்ளது. இதனால் வனத்துறையினர் ஆச்சர்யமடைந்துள்ளனர்.சிக்கமகளூரு கொட்டிகேஹாரா கிராமத்தில் 5 வயதான ஆண் குரங்கு ஒன்று, மக்களுக்கு தொந்தரவு கொடுத்தது. பழங்கள், தின்பண்டங்களை பறித்து சென்றது. இதன் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால்,

சிக்கமகளூரு : பாம்பு 12 ஆண்டுகள் காத்திருந்து பழி வாங்கும் என கூறுவதுண்டு. ஆனால் குரங்கு ஒன்று, நபரை பழி வாங்க 22 கி.மீ., துாரம் சென்றுள்ளது.

இதனால் வனத்துறையினர் ஆச்சர்யமடைந்துள்ளனர்.சிக்கமகளூரு கொட்டிகேஹாரா கிராமத்தில் 5 வயதான ஆண் குரங்கு ஒன்று, மக்களுக்கு தொந்தரவு கொடுத்தது. பழங்கள், தின்பண்டங்களை பறித்து சென்றது. இதன் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால், வனத்துறையிடம் புகார் செய்தனர். இதையடுத்து அங்கு வந்த அவர்கள், குரங்கை பிடிக்க முடியாமல் திணறினர்.

இதற்கு கிராமத்தினர் உதவினர். குறிப்பாக ஆட்டோ ஓட்டுனர் ஜெகதீஷ், குரங்கை விரட்டினார். கையை கடித்தது கோபமடைந்த குரங்கு, ஜெகதீஷ் மீது பாய்ந்து, கையை பலமாக கடித்து காயப்படுத்தியது. பீதியடைந்த அவர், அங்கிருந்து ஓடிவிட்டார். ஆனால் அவரை விடாமல் விரட்டி சென்றது. அவர் ஆட்டோவில் சென்ற போதும் விடாமல் ஆட்டோ மீது பாய்ந்து சேதப்படுத்தியது. நீண்ட நேரம் ஆட்டம் காண்பித்த குரங்கை, 30 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராடி பிடித்தனர். கிராமத்திலிருந்த 22 கி.மீ., தொலைவிலுள்ள பாளூர் வனத்தில் விட்டனர். தொந்தரவு ஒழிந்தது என கிராமத்தினர் நிம்மதியடைந்தனர்.

ஆனால் குரங்கு, ஜெகதீஷை தேடி, நான்கே நாட்களில் 22 கி.மீ., துாரத்தில் உள்ள கொட்டிகேஹாரா கிராமத்துக்கு திரும்பி உள்ளது. இதையறிந்த அவர் பயத்தில் நடுங்கினார். தன்னை பழிவாங்க வந்துள்ளதை வனத்துறையிடம் கூறி அதை பிடிக்கும்படி மன்றாடினார். அதன்பின் வனத்துறையினர், இரண்டாவது முறையாக, நடவடிக்கை எடுத்து, இன்னும் தொலைவிலுள்ள வனத்தில் கொண்டு விட்டனர்.

கெடுதல்

வனத்துறை அதிகாரி மோகன்குமார் கூறுகையில், ''ஒரு நபரை, ஏன் குறி வைக்கிறது என எங்களுக்கு தெரியவில்லை. இதற்கு முன் அவர், அக்குரங்குக்கு ஏதாவது கெடுதல் செய்திருக்கலாம். இது போன்று பழி வாங்க வந்ததை இப்போது தான் முதன் முறையாக பார்க்கிறோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X