லைப் சைன்ஸ் நிறுவனம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு பயோசென்சார்| Dinamalar

லைப் சைன்ஸ் நிறுவனம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு 'பயோசென்சார்'

Added : செப் 26, 2021 | |
மதுரை:மதுரை அரசு மருத்துவமனையில் லைப் சைன்ஸ் நிறுவனம் சார்பில் நோயாளிகளை கண்காணிக்கும் 'பயோ சென்சார்' கருவிகள் வழங்கும் விழா நடந்தது.அமைச்சர் தியாகராஜன் டீன் ரத்தினவேலிடம் பயோ சென்சார் கருவிகளை வழங்கினார். நிறுவன நிர்வாகி சரவணன், மருத்துவத்துறை தலைவர் டாக்டர் நடராஜன் கலந்து கொண்டனர்.நிறுவன நிர்வாக இயக்குனர் ஹரி சுப்ரமணியம் கூறியதாவது: ஒரு பயோ சென்சார்

மதுரை:மதுரை அரசு மருத்துவமனையில் லைப் சைன்ஸ் நிறுவனம் சார்பில் நோயாளிகளை கண்காணிக்கும் 'பயோ சென்சார்' கருவிகள் வழங்கும் விழா நடந்தது.அமைச்சர் தியாகராஜன் டீன் ரத்தினவேலிடம் பயோ சென்சார் கருவிகளை வழங்கினார். நிறுவன நிர்வாகி சரவணன், மருத்துவத்துறை தலைவர் டாக்டர் நடராஜன் கலந்து கொண்டனர்.நிறுவன நிர்வாக இயக்குனர் ஹரி சுப்ரமணியம் கூறியதாவது: ஒரு பயோ சென்சார் கருவியின் மதிப்பு ரூ.7000 வீதம் 1000 கருவிகளை வழங்கியுள்ளோம். இதை நோயாளியின் உடலில் வயர்கள் இன்றி பொருத்தி இருதய துடிப்பு, ஆக்சிஜன் அளவு உட்பட பல்வேறு நுட்பங்களை கண்காணிக்கலாம். இதை கண்காணிப்பதற்காக ரூ.22 லட்சம் செலவில் நர்சிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது. நிறுவனம் சார்பில் ரூ.85 லட்சம் மதிப்பில் அரசு மருத்துவமனையில் கருவிகளுடன் மற்றும் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X