வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு: டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021
Share
Advertisement
புதுடில்லி-மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த உத்தரவிடக் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.ஆலோசனைடில்லியின் ரோஹினியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று ரவுடிகள் கொல்லப்பட்டனர். சட்ட பயிற்சி மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்தார். நீதிமன்ற

புதுடில்லி-மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த உத்தரவிடக் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.



latest tamil news




ஆலோசனை

டில்லியின் ரோஹினியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று ரவுடிகள் கொல்லப்பட்டனர். சட்ட பயிற்சி மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்தார். நீதிமன்ற வளாகத்துக்குள் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.இந்த சம்பவத்துக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அதிர்ச்சி தெரிவித்துள்ளார். டில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். படேலை தொடர்பு கொண்டு, அவர் ஆலோசனை நடத்தினார்.


latest tamil news


இந்நிலையில், டில்லியைச் சேர்ந்த தீபா ஜோஷி என்ற வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:ரோஹினி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்கு தொடர்ந்துள்ளோர் இடையே இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.அடையாள அட்டைநீதிமன்ற வளாகங்களில் உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும். வழக்கறிஞர் உட்பட அனைவரையும் அடையாள அட்டை காண்பித்த பின்பே அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X