சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

இயற்கை பொருள் வீணாவதை தடுக்கலாம்!

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021
Share
Advertisement
கொட்டாங்குச்சியை வைத்து பலவிதமான பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும் ராஜசேகர்: புதுச்சேரி, கலிதீர்த்தாள் குப்பத்தைச் சேர்ந்தவன். 10ம் வகுப்பு முடித்து, 'கலை மற்றும் கைவினை' தொடர்பாக இரண்டு ஆண்டுகளும், 'நுண்கலை' தொடர்பாக மூன்று ஆண்டுகளும் படித்தேன்.முதன்முதலில், கொட்டாங்குச்சியில் பறவையின் இறகு போன்ற சாவிக்கொத்து, கல் வைத்த மோதிரம் செய்தேன். 1988-லேயே 10
சொல்கிறார்கள்



கொட்டாங்குச்சியை வைத்து பலவிதமான பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வரும் ராஜசேகர்: புதுச்சேரி, கலிதீர்த்தாள் குப்பத்தைச் சேர்ந்தவன். 10ம் வகுப்பு முடித்து, 'கலை மற்றும் கைவினை' தொடர்பாக இரண்டு ஆண்டுகளும், 'நுண்கலை' தொடர்பாக மூன்று ஆண்டுகளும் படித்தேன்.

முதன்முதலில், கொட்டாங்குச்சியில் பறவையின் இறகு போன்ற சாவிக்கொத்து, கல் வைத்த மோதிரம் செய்தேன். 1988-லேயே 10 ரூபாய்க்கு அதை விற்றேன். எனக்கு அது மேலும் ஆர்வத்தைக் கூட்டியது. தட்டாஞ்சாவடியில், மாவட்ட தொழில் மையத்தில் 25 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினேன். துவக்கத்தில் ஆறு பேருக்கு இந்த கலைத் தொழில் பற்றி கற்றுக் கொடுத்தேன். அதனால் கொஞ்சம் வருவாயும் கிடைத்தது.

கொட்டாங்குச்சியில் மோதிரம், கம்மல், வளையல், டீ கப், ஐஸ்கிரீம் கப், கிளிப் என ௧௦௦க்கும் மேற்பட்ட பொருட்களை செய்கிறேன். இது தவிர, தேங்காய் பஞ்சு, தென்னை மரப் பலகையிலும் பொருட்கள் செய்கிறேன்.இவற்றை செய்ய தனியாக மிஷினெல்லாம் கிடையாது. நமக்கு ஏத்த மாதிரி நாம் தான் மிஷினை தயார் செய்து கொள்ள வேண்டும்.

மாவட்ட தொழில் மையத்தினர், என்னைப் போன்ற கைவினைக் கலைஞர்களை பல மாநிலங்களுக்கு அழைத்துச் செல்வர். எங்களுடைய கைவினைப் பொருட்களை அங்கு காட்சிப்படுத்துவோம். அங்கு வரும் வாடிக்கையாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் எங்களுடைய தொடர்பு எண்களை வாங்கி சென்று, 'ஆர்டர்' கொடுப்பர்.

இதுவரை நெருங்கிய நண்பர்கள் வாயிலாக கொட்டாங்குச்சி சேகரித்து பயன்படுத்தி வருகிறேன். என்னிடம் 30 முதல் 600 ரூபாய் வரையிலான பொருட்கள் உள்ளன. 'வாட்ஸ் - ஆப்' மற்றும் முகநுால், இந்தியா மார்ட் போன்றவை வாயிலாக, தேவையான பொருட்களை வாங்கவும், விற்கவும் செய்கிறேன். உறவினர்களின் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது, கைவினைப் பொருட்களையே பரிசாக கொடுப்போம். இந்த கைவினைப் பொருட்கள் இயற்கையான நிறத்தில் இருப்பதுடன், எடை குறைவாகவும், இயற்கைக்கு நன்மை செய்வதாகவும் இருக்கும். கடினமாக உழைத்தால், அனைத்து செலவும் போக மாதம் 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கிடைக்கும்; சில சமயம் குறைவாகவும் கிடைக்கும். தற்போது கொரோனா காலம் என்பதால் ஆர்டர் குறைவாகவே கிடைக்கிறது.

எனவே, செலவு போக 20 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது.இது போன்ற சிறு கைவினைத் தொழில்களைக் கற்றுக் கொண்டால், வேலை இல்லாத பட்டதாரி இளைஞர்களின் வாழ்வும் மேம்படும்; பாரம்பரிய கலையும் அழியாது; நம் பொருளாதாரமும் வளரும்; இயற்கையான பொருட்கள் வீணாவதும் தடுக்கப்படும். மத்திய - மாநில அரசுகளும், மக்களும் ஆதரவு தந்தால் மிகச் சிறப்பான எதிர்காலம் இந்த கலைக்கு கிடைக்கும்.தொடர்புக்கு: 94880 56489; 99947 89449


ஆதாரமற்ற பகிர்வுகளை நம்பாதீர்!


சித்த மருந்துகள் சாப்பிடுவோர், கோவிட் தடுப்பூசி போட்டு கொள்வது தொடர்பாக கூறும், சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார்:

சித்த மருந்துகள் எடுத்துக் கொள்ளும் போது தடுப்பூசி போடக் கூடாது என்பது தவறான தகவல். சித்த மருந்துகளில் மூலிகை சார்ந்த மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் எந்தவித பயம், தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.மருத்துவரின் மேற்பார்வையில் எடுக்கப்படும் மூலிகை சார்ந்த மருந்துகளால், மற்ற மருந்துகளோடு செயல்விளைவு ஏற்பட வாய்ப்புகள் இல்லை.
அதேநேரம், நாள்பட்ட நோய்களுக்காக நீண்டகாலமாக மருந்துகள் எடுப்பவர்கள் தாங்கள் சிகிச்சை பெறும் சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.சித்த மருத்துவர் என்பவர், சித்த மருத்துவப் படிப்பை முடித்து பட்டம் பெற்றவர் அல்லது அனுபவம் வாய்ந்த பாரம்பரிய சித்த மருத்துவ

மேலும், 'வாட்ஸ் - ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில் வரும் ஆதாரமற்ற பகிர்வுகளை நம்பி ஏமாறுவதும் தவறு.கோவிட் தடுப்பூசி போட்டவுடன் காய்ச்சல் ஏற்பட்டால், மருத்துவர் ஆலோசனைப்படி கபசுர குடிநீர் அல்லது நிலவேம்பு குடிநீர் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். காய்ச்சலுக்காக பரிந்துரைக்கப்படும் மற்ற சித்த மருந்துகளையும் எடுத்துக் கொள்ளலாம். அதே போல தடுப்பூசியால் ஏற்படும் உடல் சோர்வுக்கு, சித்த மருந்துகளை எவ்வித தயக்கமும் இல்லாமல் பயன்படுத்தலாம்.நீரிழிவு பாதிப்பு, உயர் அழுத்த நோய்க்காக சித்த மருந்துகளை எடுப்பவர்களும் எவ்வித மனத்தடையும் இல்லாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்
மேற்குறிப்பிட்ட தொற்றா நோய்களுக்காக பெரும்பாலும் மூலிகை சார்ந்த மருந்துகளே பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.இதயம் சார்ந்த நோய் மற்றும் ரத்த உறைதல் பிரச்னைக்காக ஒருங்கிணைந்த சித்த மற்றும் ஆங்கில மருந்துகளை எடுத்து கொள்பவர்கள், மருத்துவரின் தெளிவான அறிவுரையோடு தடுப்பூசி செலுத்துவது அவசியம்.பெரும்பாலான சித்த மருந்துகள், நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை - வலுவாக்கும் தன்மை கொண்டவை. எனவே, தகுதியான சித்த மருத்துவரை ஆலோசித்து மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X