தமிழ்நாடு

மின்னணு பொருளாதார மண்டலம் அமைக்க... தனி செயல் திட்டம்! கோவை தொழில்அமைப்புகள் ஒருமித்த குரல்

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021
Share
Advertisement
கோவை:'பன்னோக்கு தொழிலில் தடம் பதித்து வரும் கோவையில், மின்னணு தொழில் நிறுவனங்களை உருவாக்க, தனி செயல் திட்டம் அறிவிக்க வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கினால், வேலைவாய்ப்பு அதிகரிக்கும்' என, கோவை தொழில் அமைப்புகள் ஒருமித்தமாக குரல் எழுப்பியுள்ளன.சென்னைக்கு அடுத்தபடியாக, தொழில்கள் நிறைந்த நகரமாக கோவை உள்ளது. ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், ஜவுளி தொழில்
 மின்னணு பொருளாதார மண்டலம் அமைக்க... தனி செயல் திட்டம்! கோவை தொழில்அமைப்புகள் ஒருமித்த குரல்

கோவை:'பன்னோக்கு தொழிலில் தடம் பதித்து வரும் கோவையில், மின்னணு தொழில் நிறுவனங்களை உருவாக்க, தனி செயல் திட்டம் அறிவிக்க வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கினால், வேலைவாய்ப்பு அதிகரிக்கும்' என, கோவை தொழில் அமைப்புகள் ஒருமித்தமாக குரல் எழுப்பியுள்ளன.

சென்னைக்கு அடுத்தபடியாக, தொழில்கள் நிறைந்த நகரமாக கோவை உள்ளது. ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், ஜவுளி தொழில் இயந்திரங்கள், ஜவுளி, இன்ஜினியரிங், மருத்துவம், கல்வி என பல்வேறு தொழில்களில் முன்னணியில் இருக்கிறது. எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான தொழில்களை ஏற்படுத்தினால், பொருளாதாரம் உயரவும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவும், ஏற்றுமதியையும் உயர்த்தவும் முடியும் என, இந்திய தொழில் கூட்டமைப்பு, 'கொடிசியா' உள்ளிட்ட அமைப்புகள் தமிழக அரசிடம் வலியுறுத்தி வருகின்றன.

இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) தலைவர் அர்ஜூன் பிரகாஷ் கூறியதாவது:கோவையில் எலக்ட்ரானிக்ஸ் தொழில்வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. தற்போது மிக குறைவான எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களே உள்ளன. செமி கன்டக்டர்கள், பிரிண்டேடு சர்க்யூட் போர்டுகள் போன்றவை தயாராகின்றன. எல்இடி, செமி கன்டக்டர்கள், கம்ப்யூட்டர், பிரிண்டர் உதிரி பாகங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க தேவையான வசதிகளை உருவாக்க வேண்டும்.

சர்வதேச அளவிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் தேவையில், இந்தியாவின் பங்கு, 3 சதவீதமாக உள்ளது. கொரியா, தைவான், ஜப்பான் போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளன. தேவையான எலக்ட்ரானிக் பொருட்களை இறக்குமதி செய்து, பயன்படுத்தி வருகிறோம்.தற்போது எலக்ட்ரானிக்ஸ் பயன்படுத்தாத பொருட்களே இல்லை. மொபைல் போன் முதல் கார் வரை பயன்பாடுகள் உள்ளன. கோவையில் 8 பல்கலைகள், 64 இன்ஜினியரிங் கல்லுாரிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பல நுாறு இன்ஜினியரிங் பட்டதாரிகள் உருவாகி வருகின்றனர்.
இவர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்க, எலக்ட்ரானிக்ஸ் தொழில் செயல் திட்டத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.எலக்ட்ரானிக்ஸ் பொருள் தயாரிக்கும் நிறுவனங்களை கோவையில் ஏற்படுத்த பல்வேறு கட்ட முயற்சிகளை இந்திய தொழில்கள் கூட்டமைப்பு மேற்கொள்கிறது. இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் தொடர்புகளை ஏற்படுத்தி, அவற்றின் உற்பத்தியை துவக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் தொழிற்சாலைகளை துவக்குவதால், வேலைவாய்ப்புகள் உருவாகும். தேவையான தொழில்நுட்பங்கள் கிடைக்கும்.ஒரு எலக்ட்ரானிக்ஸ் தொழில் செயல் திட்டத்தை உருவாக்கி, செயல்படுத்த தனி குழு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

'வேலைவாய்ப்பு அதிகரிக்கும்'

கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்க (கொடிசியா) தலைவர் ரமேஷ்பாபு கூறுகையில், ''கம்ப்யூட்டர், பிரிண்டர், சர்வர், வாஷிங் மெஷின், ஆட்டோமொபைல், மொபைல் போன் என அனைத்து பொருட்களிலும் எலக்ட்ரானிக்ஸ் பயன்படுகிறது. எதிர்கால தேவையை கருத்தில்கொண்டு, எலக்ட்ரானிக்ஸ் சிறப்பு பொருளாதார மண்டலத்தை ஏற்படுத்த வேண்டும். பல லட்சம் ருபாய் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்வதோடு, வேலைவாய்ப்பு அதிகரிக்கும். மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்போடு, செயல்படுத்த வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X