மனைவி கள்ளத்தொடர்பு கணவர் தற்கொலை

Added : செப் 26, 2021
Share
Advertisement
விஜயபுரா : காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி, வேறொருவருடன் கள்ளத்தொடர்பு வைத்து கொண்டதால், மனம் நொந்த கணவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விஜயபுரா தாளிகோட்டின் பொம்மனஹள்ளியில் வசித்த வெங்கடேஷ், 25, சில ஆண்டுக்கு முன், 22 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.ஆனால் இவரது மனைவி, வெங்கடேஷின் பங்காளி ஸ்ரீஷைலுடன் கள்ளத்தொடர்பு வைத்து கொண்டதுடன்

விஜயபுரா : காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி, வேறொருவருடன் கள்ளத்தொடர்பு வைத்து கொண்டதால், மனம் நொந்த கணவர், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விஜயபுரா தாளிகோட்டின் பொம்மனஹள்ளியில் வசித்த வெங்கடேஷ், 25, சில ஆண்டுக்கு முன், 22 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.ஆனால் இவரது மனைவி, வெங்கடேஷின் பங்காளி ஸ்ரீஷைலுடன் கள்ளத்தொடர்பு வைத்து கொண்டதுடன் அவருடனேயே வசிக்க துவங்கினார். இது குறித்து கணவர், தாளிகோட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார், அப்பெண்ணை அழைத்து விசாரித்த போது, கணவருடன் செல்ல தனக்கு விருப்பமில்லை. காதலருடன் வசிப்பதாக கூறினார். காதலித்து திருமணம் செய்த மனைவி, தனக்கு துரோகம் செய்ததால், மனம் நொந்த கணவர், வாழ்க்கையை முடித்துக்கொள்வதாக 'வீடியோ' பதிவு செய்து, நண்பர்களுக்கு அனுப்பினார்.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள், நேற்று காலை வெங்கடேஷை தேடி சென்ற போது, அவர் தன் வயலில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. தாளிகோட் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X