சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டி.கே., மார்க்கெட்டில் 25 கடைகளுக்கு 'சீல்'

Added : செப் 26, 2021
Share
Advertisement
கோவை:வாடகை செலுத்தாததால், கோவை தியாகி குமரன் மார்கெட்டில் (டி.கே.மார்க்கெட்), 25 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.கோவை, ராஜ வீதியில், தியாகி குமரன் மார்க்கெட் செயல்படுகிறது. காய்கறி, மளிகை உள்ளிட்ட, 475 கடைகள் செயல்படுகின்றன. 100 கடைகளின் உரிமையாளர்கள் வாடகையை முறையாக செலுத்தவில்லை. மாநகராட்சி வருவாய் பிரிவினர் பலமுறை நோட்டீஸ் வழங்கியும், நிலுவை தொகை
 டி.கே., மார்க்கெட்டில் 25 கடைகளுக்கு 'சீல்'

கோவை:வாடகை செலுத்தாததால், கோவை தியாகி குமரன் மார்கெட்டில் (டி.கே.மார்க்கெட்), 25 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.கோவை, ராஜ வீதியில், தியாகி குமரன் மார்க்கெட் செயல்படுகிறது. காய்கறி, மளிகை உள்ளிட்ட, 475 கடைகள் செயல்படுகின்றன. 100 கடைகளின் உரிமையாளர்கள் வாடகையை முறையாக செலுத்தவில்லை. மாநகராட்சி வருவாய் பிரிவினர் பலமுறை நோட்டீஸ் வழங்கியும், நிலுவை தொகை செலுத்த யாரும் முன்வரவில்லை.உதவி கமிஷனர் (வருவாய்) செந்தில்குமார் ரத்தினம், மத்திய மண்டல உதவி வருவாய் அலுவலர் செந்தில் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். வாடகை செலுத்தாமல் இருந்த, 100 கடைகளில் முதல், 25 கடைகளுக்கு 'சீல்' வைத்தனர். மற்ற கடை உரிமையாளர்களுக்கு, உடனடியாக, வாடகை நிலுவை செலுத்த அறிவுறுத்தப்பட்டது.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'தியாகி குமரன் மார்க்கெட்டில், 100 கடைகள், ரூ.67.47 லட்சம் வாடகை பாக்கி உள்ளது.''சீல்' வைக்கப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் நிலுவை தொகை செலுத்த துவங்கியுள்ளனர். வாடகை செலுத்தாமல் உள்ள, மற்ற, 75 கடைகளுக்கு அடுத்த கட்டமாக 'சீல்' வைக்கப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X