பணம் திருட்டு போலீசார் தேடுதல் வேட்டை

Added : செப் 26, 2021
Share
Advertisement
ராஜகோபால நகர், : வாடிக்கையாளர் போல நடித்து கடையில் பணம் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெங்களூரு ராஜகோபால நகர் ஆஞ்சநேயர் கோவில் அருகில், செல்ல பிராணிகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் கடை உள்ளது. இங்கு, நாய்களுக்கு பெல்ட் வாங்குவதற்காக செப்டம்பர் 11ல், இரண்டு வாலிபர்கள் வந்திருந்தனர். ஒருவர் கடை உரிமையாளர் வினிதாவிடம், பெல்ட்டை காட்டுமாறு

ராஜகோபால நகர், : வாடிக்கையாளர் போல நடித்து கடையில் பணம் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பெங்களூரு ராஜகோபால நகர் ஆஞ்சநேயர் கோவில் அருகில், செல்ல பிராணிகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் கடை உள்ளது. இங்கு, நாய்களுக்கு பெல்ட் வாங்குவதற்காக செப்டம்பர் 11ல், இரண்டு வாலிபர்கள் வந்திருந்தனர். ஒருவர் கடை உரிமையாளர் வினிதாவிடம், பெல்ட்டை காட்டுமாறு கூறினார். மற்றொருவர் போனில் பேசியபடி இருந்தார்.பெல்ட் பிரிவுக்கு சென்று, வினிதா காட்டி கொண்டிருந்தபோது போனில் பேசி கொண்டிருந்தவர், பணம் வைக்கப்பட்டுள்ள மேஜை டிராயரை திறந்து அதிலுள்ள பணத்தை எடுத்து கொண்டார். சிறிது நேரத்தில் இருவரும் எதுவும் வாங்காமல் சென்று விட்டனர். அவர்கள் சென்ற பின், டிராயரை திறந்து பார்த்த போது அதிலிருந்த பணம் மாயமானது தெரியவந்தது.இது குறித்து ராஜகோபாலா நகர் போலீசில் வினிதா புகார் செய்தார். கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை அவர்கள் ஆய்வு செய்தனர்.அதில், வாலிபர் பணம் எடுத்து செல்வது பதிவாகி உள்ளது. இந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர். இதற்கு முன் காமாட்சிபாளையாவில் மதுக்கடை ஒன்றில் இது போல பணம் திருடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X