பொது செய்தி

இந்தியா

பிரதமரின் சொத்து மதிப்பு 22 லட்சம் ரூபாய் உயர்வு

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
புதுடில்லி-பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு, முந்தைய ஆண்டைவிட தற்போது 22 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது.நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றது முதல், பிரதமரின் இணையதளத்தில் ஆண்டு தோறும் தன் சொத்து விபரங்களை பதிவிட்டு வருகிறார். கையிருப்புஅமைச்சர்களின் சொத்து விபரங்களும் வெளியிடப்படுகின்றன. அதன்படி, 2020 - 2021ம் நிதியாண்டுக்கான பிரதமர் மோடியின் சொத்து

புதுடில்லி-பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு, முந்தைய ஆண்டைவிட தற்போது 22 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது.



latest tamil news


நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றது முதல், பிரதமரின் இணையதளத்தில் ஆண்டு தோறும் தன் சொத்து விபரங்களை பதிவிட்டு வருகிறார். கையிருப்புஅமைச்சர்களின் சொத்து விபரங்களும் வெளியிடப்படுகின்றன. அதன்படி, 2020 - 2021ம் நிதியாண்டுக்கான பிரதமர் மோடியின் சொத்து விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அவரது சொத்து மதிப்பு முந்தைய ஆண்டை விட 22 லட்சம் ரூபாய் உயர்ந்துள்ளது.


latest tamil news


அவரது மொத்த சொத்து மதிப்பு 3.07 கோடி ரூபாய். கடந்த மார்ச் 31 உடன் முடிந்த நிதியாண்டின்படி அவரது பெயரில் வங்கியில் 1.5 லட்சம் ரூபாய் முதலீடுகளும், 36 ஆயிரம் ரூபாய் ரொக்க கையிருப்பும் உள்ளன. குஜராத்தின் காந்தி நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் அவர் செய்துள்ள எப்.டி., எனப்படும் நிரந்தர முதலீடு, 1.64 கோடி ரூபாயில் இருந்து 1.86 கோடி ரூபாயாக உள்ளது.

எந்தக் கடனும் இல்லைஇதுவே மோடியின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதற்கு முக்கிய காரணம். பங்கு சந்தை, மியூச்சுவல் பண்டில் எந்த முதலீடும் அவர் செய்யவில்லை. அதேபோல் எந்தக் கடனும் இல்லை; சொந்த வாகனமும் இல்லை.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-செப்-202122:02:27 IST Report Abuse
மதுமிதா வாரிசு குடும்பத்தில் சொத்தின் மதிப்பு திரு ஸ்டாலின் முதல்வராவதற்கு முன்எண்ணி மாளாது பின் நிச்சயம் நம் பிரதமரை விட பல மடங்கு அதிகம் தான். கஜானா மட்டும் காலி
Rate this:
Cancel
26-செப்-202121:05:02 IST Report Abuse
அப்புசாமி கம்பெனிகளிடம் லஞ்சம் வாங்கி சம்பாரிக்கிறதெல்லாம் பழைய ஸ்டைல். மாட்டிக்கிற ஆபத்து உண்டு. அதே கம்பெனிகளிடம் இன்சைடர் இன்பார்மேஷன் வாங்கி பங்குகளை வாங்குனா ஈசியா மாட்டிக்காம சம்பாரிக்கலாம்.
Rate this:
Cancel
26-செப்-202121:04:56 IST Report Abuse
அப்புசாமி கம்பெனிகளிடம் லஞ்சம் வாங்கி சம்பாரிக்கிறதெல்லாம் பழைய ஸ்டைல். மாட்டிக்கிற ஆபத்து உண்டு. அதே கம்பெனிகளிடம் இன்சைடர் இன்பார்மேஷன் வாங்கி பங்குகளை வாங்குனா ஈசியா மாட்டிக்காம சம்பாரிக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X