மைசூர் அரண்மனை நுழைவு கட்டணம் உயர்வு

Added : செப் 26, 2021
Share
Advertisement
மைசூரு : மைசூரு அரண்மனை நுழைவு கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.மைசூரு அரண்மனையை சுற்றி பார்க்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். வார நாட்களில், பெரியவர்கள், வெளிநாட்டினருக்கு, 70 ரூபாய்; வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில், பெரியவர்களுக்கு, 90 ரூபாயும்; குழந்தைகளுக்கு, 30 ரூபாயும்; மாணவர்களுக்கு, 10 ரூபாயும் நுழைவு கட்டணம்

மைசூரு : மைசூரு அரண்மனை நுழைவு கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.மைசூரு அரண்மனையை சுற்றி பார்க்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். வார நாட்களில், பெரியவர்கள், வெளிநாட்டினருக்கு, 70 ரூபாய்; வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில், பெரியவர்களுக்கு, 90 ரூபாயும்; குழந்தைகளுக்கு, 30 ரூபாயும்; மாணவர்களுக்கு, 10 ரூபாயும் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றன.

இதன் மூலம், கொரோனா தொற்று பரவலுக்கு முன், ஆண்டுக்கு, 17 கோடி ரூபாய் வருவாய் வந்து கொண்டிருந்தன. இரண்டு ஆண்டுகளாக வருவாய் கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில், நுழைவு கட்டணம் திடீரென அதிகரித்து, அரண்மனை நிர்வாக உதவி இயக்குனர் சுப்பிரமணியா நேற்று உத்தரவிட்டார்.அவர் கூறியதாவது:அரண்மனையை நிர்வகிக்க மாதந்தோறும், 30 லட்சம் ரூபாய் செலவாகிறது. ஊழியர்களின் ஊதியம் நுழைவு கட்டணம் மூலம் வரும் வருவாயிலிருந்து வழங்கப்படுகிறது.அரண்மனையின் மின் விளக்குகள், அதற்கான மின் கட்டணம், மாதத்துக்கு, 10 லட்சம் ரூபாய் வருகிறது. வருவாய் குறைந்ததால் நிர்வகிப்புக்கு சிரமமாகிறது.இந்நிலையில், இதற்கு முன், வார நாட்கள், வார இறுதி நாட்கள், பண்டிகை காலங்களில் தனி கட்டணம் வசூலிக்கப்பட்டது. இனி அனைத்து நாட்களுக்கும் ஒரே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதன்படி, பெரியவர்களுக்கு, 100 ரூபாயும்; குழந்தைகளுக்கு, 50 ரூபாயும்; மாணவர்களுக்கு, 30 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X