சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடுக்கடலில் படகில் தீ விபத்து பொருட்கள் எரிந்து நாசம்

Added : செப் 26, 2021
Share
Advertisement
காசிமேடு : நடுக்கடலில், படகில் 'காஸ்' கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.காசிமேடு, திடீர் நகரைச் சேர்ந்தவர் முருகன், 45. இவருக்கு சொந்தமான பைபர் படகில், காசிமேடைச் சேர்ந்த குப்பன், ராஜி, அருண் உள்ளிட்ட ஆறு மீனவர்கள், நேற்று முன்தினம் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.பழவேற்காடு அருகே நடுக்கடலில் மீன்பிடித்தபோது, சமைப்பதற்காக 'காஸ்' அடுப்பை பற்ற வைத்தபோது, 'காஸ்'
 நடுக்கடலில் படகில் தீ விபத்து பொருட்கள் எரிந்து நாசம்

காசிமேடு : நடுக்கடலில், படகில் 'காஸ்' கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.காசிமேடு, திடீர் நகரைச் சேர்ந்தவர் முருகன், 45. இவருக்கு சொந்தமான பைபர் படகில், காசிமேடைச் சேர்ந்த குப்பன், ராஜி, அருண் உள்ளிட்ட ஆறு மீனவர்கள், நேற்று முன்தினம் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.

பழவேற்காடு அருகே நடுக்கடலில் மீன்பிடித்தபோது, சமைப்பதற்காக 'காஸ்' அடுப்பை பற்ற வைத்தபோது, 'காஸ்' கசிந்து, படகில் தீ விபத்து ஏற்பட்டது.மளமளவென பரவிய தீயால், படகில் இருந்த ஐஸ் பாக்ஸ், ஜி.பி.எஸ்., இயந்திரம், வலைகள் உள்ளிட்ட உபகரணங்கள் எரிய துவங்கின. சுதாரித்த மீனவர்கள் அனைவரும், கடலில் குதித்து உயிர் தப்பினர்.மீனவர்கள் உதவி கேட்டு கத்த, அருகில் படகில் இருந்த மீனவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில், 2 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. குப்பன் என்ற மீனவருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது.இது குறித்து, காசிமேடு மீன்பிடி துறைமுக இயக்குனர் அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மீனவர்கள் அனைவரும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், நேற்று கரை திரும்பினர்.தீ விபத்து ஏற்பட்ட படகை பார்வையிட்ட ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., எபினேசர், மீனவருக்கு உதவித்தொகை வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X