நீதிபதிகளுக்கு சிறந்த பின்னணி அவசியம்: உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
புதுடில்லி-'நீதிமன்றங்களின் மீதான மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு, நீதிபதிகள் சிறந்த பின்னணியை கொண்டவர்களாக இருக்க வேண்டியது அவசியம்' என, வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.பிரச்னைராஜஸ்தானில் மாஜிஸ்திரேட் பதவிக்கு 2013ல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அவ்வாறு விண்ணப்பித்தவர்களில் ஒருவர், தன் மீது நான்கு வழக்குகள் இருந்ததாகவும், சமரசம்

புதுடில்லி-'நீதிமன்றங்களின் மீதான மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு, நீதிபதிகள் சிறந்த பின்னணியை கொண்டவர்களாக இருக்க வேண்டியது அவசியம்' என, வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.



latest tamil news




பிரச்னை

ராஜஸ்தானில் மாஜிஸ்திரேட் பதவிக்கு 2013ல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அவ்வாறு விண்ணப்பித்தவர்களில் ஒருவர், தன் மீது நான்கு வழக்குகள் இருந்ததாகவும், சமரசம் வாயிலாக அதற்கு தீர்வு காணப்பட்டதாகவும் விண்ணப்பத்தில் கூறிஇருந்தார். அந்த வழக்குகளின் தன்மையை கருத்தில் வைத்து, மாஜிஸ்திரேட் பதவிக்கு அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.எஸ். நரசிம்மா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு சமீபத்தில் பிறப்பித்த உத்தரவு: நீதிபதி பதவிக்கென ஒரு உயர்ந்த தரம் உள்ளது.

நீதிபதி பதவியில் இருப்போர் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பவர்கள். அவ்வாறு இருப்போர் மிகவும் உயர்ந்த நல்லொழுக்கம், சிறந்த பின்னணி களை உடையவர்களாக இருக்க வேண்டும்.நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை உறுதி செய்யவே, இந்த தரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதிகளாக, மாஜிஸ்திரேட்டுகளாக இருப்போர், அதிக அளவில் வழக்குகளை விசாரிக்கக் கூடியவர்கள். நீதிபதிகளின் செயல்பாடு மற்றும் அவர்களது நல்லொழுக்கமே நீதித் துறை மீது மக்களுக்கு நல்ல மதிப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.நிராகரித்தது செல்லும்அதனால், இந்த குறிப்பிட்ட வழக்கில் தொடர்புடையவரின் விண்ணப்பத்தை நிராகரித்தது செல்லும்.இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.


latest tamil news



சட்டங்களில் திருத்தம் தேவை!

முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் அரசு அமைந்துள்ள ஒடிசாவில், மாநில சட்ட சேவை ஆணையத்துக்கான புதிய அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா பேசியதாவது:நம் சட்டங்கள் தற்போதைய காலநிலைக்கு, சூழ்நிலைக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். அதற்கு தேவையான சட்டத் திருத்தங்கள் செய்ய வேண்டும். அரசு நிர்வாகம், சட்டசபை மற்றும் பார்லிமென்டும் இதை உறுதி செய்ய வேண்டும். அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு, அதன் மதிப்பை உறுதி செய்யும் வகையில் இந்த அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
26-செப்-202120:01:05 IST Report Abuse
spr "நீதிமன்றங்களின் மீதான மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு, நீதிபதிகள் சிறந்த பின்னணியை கொண்டவர்களாக இருக்க வேண்டியது அவசியம்' மக்களுக்கு இன்னமும் நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது. அதிலும் " ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ........என்று சட்டம் சொல்வதால் குற்றம் செய்தவர்களுக்கு நீதி மன்றங்கள் தங்களைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை அதிகமாகவே இருக்கிறது ஆனால் கீழ் நீதிமன்றத்தில் தரப்படும் தீர்ப்பு மேல் நீதிமன்றத்தால் மாற்றப்படுகிறது என்பதால் நீதிபதிகள் பேரில்தான் நம்பிக்கை குறைந்து வருகிறது
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
26-செப்-202119:41:31 IST Report Abuse
Ramesh Sargam அதேபோல், சிறந்த பின்னணி உள்ள அரசியல்வாதிகள் நமக்கு கிடைத்தால் அதைவிட வேறு என்ன வேண்டும்.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
26-செப்-202116:39:47 IST Report Abuse
meenakshisundaram வன்னியர்களுக்கு நீதிபதி பதவி கொடுக்கப்படவேண்டும் என்று பாமக என்னும் அரசியல் கட்சி கேட்டு வருகிறதே ,ஜாதி அடிப்படையில் பதவி வழங்குவது சரியாக இருக்குமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X