பொது செய்தி

இந்தியா

கோவிட் சான்றிதழில் பிறந்த தேதி சேர்க்க முடிவு

Added : செப் 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி-வெளிநாடுகளுக்கு செல்வோரின் நலன் கருதி, 'கோவின்' இணையதளத்தில் இருந்து பெறும் தடுப்பூசி சான்றிதழில், பிறந்த தேதி குறித்த முழு விபரங்களையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.'கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு 'டோஸ்'களை செலுத்தி இருந்தாலும், பிரிட்டனுக்கு வருவோர் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்' என, அந்நாட்டு அரசு

புதுடில்லி-வெளிநாடுகளுக்கு செல்வோரின் நலன் கருதி, 'கோவின்' இணையதளத்தில் இருந்து பெறும் தடுப்பூசி சான்றிதழில், பிறந்த தேதி குறித்த முழு விபரங்களையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது



latest tamil news


கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்தியோருக்கு பிரிட்டன் அனுமதி மறுத்தது. கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அங்கீகரித்தது. எனினும் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய விதி திரும்பப் பெறப்படவில்லை. கோவின் இணையதளத்தில், இந்திய பயணியர் பெறும் தடுப்பூசி சான்றிதழை ஏற்பதிலும் பிரிட்டன் அரசுக்கு தயக்கம் இருக்கிறது. இதனால் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களுக்கு இணங்கி, தடுப்பூசி சான்றிதழில், பிறந்த தேதி குறித்த முழு விவரங்களையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சான்றிதழில் வயது மட்டுமே குறிப்பிடப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் முதல், பிறந்த தேதி சேர்க்கப்பட உள்ளது.

.'கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு 'டோஸ்'களை செலுத்தி இருந்தாலும், பிரிட்டனுக்கு வருவோர் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்' என, அந்நாட்டு அரசு அறிவித்தது.கடும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, கோவிஷீல்டு தடுப்பூசியை அங்கீகரித்து பிரிட்டன் அறிவித்தது. எனினும் 10 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய விதி திரும்பப் பெறப்படவில்லை.


latest tamil news


இதேபோல் கோவின் இணையதளத்தில் இருந்து இந்திய பயணியர் பெறும் தடுப்பூசி சான்றிதழை ஏற்பதிலும் பிரிட்டன் அரசுக்கு தயக்கம் இருந்து வருகிறது.இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களுக்கு இணங்கி, கோவின் தடுப்பூசி சான்றிதழில், பிறந்த தேதி குறித்த முழு விபரங்களையும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தற்போது வரை, அதில் தடுப்பூசி செலுத்துவோரின் வயது மட்டுமே குறிப்பிடப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் முதல், சான்றிதழில் இந்த விபரங்கள் சேர்க்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
26-செப்-202112:02:45 IST Report Abuse
Raj பிறந்த தேதி குறித்த முழு விபரங்களையும் சேர்க்க இபோது தான் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மோடி படத்தை போடுவது என்பதை மருந்து கண்டு பிடிப்பதற்கு முன்பே முடிவு செய்து விட்டோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X