மாஜி காதலன் கொலை | Dinamalar

மாஜி காதலன் கொலை

Added : செப் 26, 2021
Share
மாதநாயகனஹள்ளி : 'மாஜி' காதலனை புதுக்காதலன் மூலம் கொலை செய்த காதலியை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்த நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.பெங்களூரு மாதநாயகனஹள்ளி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மாதவராவில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் செப்டம்பர் 5ல் வாலிபர் கழுத்து மற்றும் நெஞ்சில் கத்தி குத்து காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.இதை

மாதநாயகனஹள்ளி : 'மாஜி' காதலனை புதுக்காதலன் மூலம் கொலை செய்த காதலியை போலீசார் கைது செய்தனர்.

கொலைக்கு உடந்தையாக இருந்த நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.பெங்களூரு மாதநாயகனஹள்ளி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மாதவராவில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் செப்டம்பர் 5ல் வாலிபர் கழுத்து மற்றும் நெஞ்சில் கத்தி குத்து காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.இதை பார்த்த அப்பகுதியினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மாதநாயகனஹள்ளி போலீசார் விசாரித்தனர். அதில், இறந்தவர் கிரண் குமார், 27 என்பது தெரியவந்தது. இவர் ஸ்வேதா, 25 என்பவரை, ஐந்து ஆண்டாக காதலித்து வந்தார். ஸ்வேதாவுக்கு சமீபத்தில் டேவிட், 30 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இவர்களின் காதலுக்கு, கிரண் குமார் இடையூறாக இருந்துள்ளார்.இதனால் அவரை கொலை செய்ய, ஸ்வேதா முடிவு செய்தார். இதற்காக டேவிட்டிடம் ஒரு லட்சம் ரூபாய் 'டீல்' பேசி. முன் பணமாக 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.

கிரண் குமார் நடமாட்டம் குறித்தும் அவரிடம் தெரிவித்தார்.அவர் தன் நண்பர்களான தினேஷ், 27, ஸ்ரீகாந்த், 30, உதவியுடன் செப்டம்பர் 5ல் மாதவராவில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கிரண் குமார் சென்ற போது வழி மறித்து கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடினார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஸ்வேதா, டேவிட், தினேஷ், ஸ்ரீகாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X