ஆதாரமற்ற பகிர்வுகளை நம்பாதீர்! | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆதாரமற்ற பகிர்வுகளை நம்பாதீர்!

Added : செப் 26, 2021
Share
சித்த மருந்துகள் சாப்பிடுவோர், கோவிட் தடுப்பூசி போட்டு கொள்வது தொடர்பாக கூறும், சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார்: சித்த மருந்துகள் எடுத்துக் கொள்ளும் போது தடுப்பூசி போடக் கூடாது என்பது தவறான தகவல். சித்த மருந்துகளில் மூலிகை சார்ந்த மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் எந்தவித பயம், தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.மருத்துவரின் மேற்பார்வையில் எடுக்கப்படும்

சித்த மருந்துகள் சாப்பிடுவோர், கோவிட் தடுப்பூசி போட்டு கொள்வது தொடர்பாக கூறும், சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார்: சித்த மருந்துகள் எடுத்துக் கொள்ளும் போது தடுப்பூசி போடக் கூடாது என்பது தவறான தகவல்.

சித்த மருந்துகளில் மூலிகை சார்ந்த மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் எந்தவித பயம், தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.மருத்துவரின் மேற்பார்வையில் எடுக்கப்படும் மூலிகை சார்ந்த மருந்துகளால், மற்ற மருந்துகளோடு செயல்விளைவு ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

அதேநேரம், நாள்பட்ட நோய்களுக்காக நீண்டகாலமாக மருந்துகள் எடுப்பவர்கள் தாங்கள் சிகிச்சை பெறும் சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பூசி போட்டு கொள்ளலாம்.சித்த மருத்துவர் என்பவர், சித்த மருத்துவப் படிப்பை முடித்து பட்டம் பெற்றவர் அல்லது அனுபவம் வாய்ந்த பாரம்பரிய சித்த மருத்துவராக இருப்பது அவசியம். போலி மருத்துவர்களின் தவறான ஆலோசனைகளை நம்ப வேண்டாம். மேலும், 'வாட்ஸ் - ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில் வரும் ஆதாரமற்ற பகிர்வுகளை நம்பி ஏமாறுவதும் தவறு.கோவிட் தடுப்பூசி போட்டவுடன் காய்ச்சல் ஏற்பட்டால், மருத்துவர் ஆலோசனைப்படி கபசுர குடிநீர் அல்லது நிலவேம்பு குடிநீர் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். காய்ச்சலுக்காக பரிந்துரைக்கப்படும் மற்ற சித்த மருந்துகளையும் எடுத்துக் கொள்ளலாம்.

அதே போல தடுப்பூசியால் ஏற்படும் உடல் சோர்வுக்கு, சித்த மருந்துகளை எவ்வித தயக்கமும் இல்லாமல் பயன்படுத்தலாம்.நீரிழிவு பாதிப்பு, உயர் அழுத்த நோய்க்காக சித்த மருந்துகளை எடுப்பவர்களும் எவ்வித மனத்தடையும் இல்லாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.மேற்குறிப்பிட்ட தொற்றா நோய்களுக்காக பெரும்பாலும் மூலிகை சார்ந்த மருந்துகளே பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதயம் சார்ந்த நோய் மற்றும் ரத்த உறைதல் பிரச்னைக்காக ஒருங்கிணைந்த சித்த மற்றும் ஆங்கில மருந்துகளை எடுத்து கொள்பவர்கள், மருத்துவரின் தெளிவான அறிவுரையோடு தடுப்பூசி செலுத்துவது அவசியம்.பெரும்பாலான சித்த மருந்துகள், நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை - வலுவாக்கும் தன்மை கொண்டவை. எனவே, தகுதியான சித்த மருத்துவரை ஆலோசித்து மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X