பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: விருதுக்கு மரியாதை வேண்டும்!

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:தமிழக அரசின் கல்வித்துறை சார்பில், ஒவ்வோர் ஆண்டும் சிறந்த ஆசிரியர்களுக்கு, 'டாக்டர் ராதாகிருஷ்ணன்' விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஆறு முதல் 12 ஆசிரியர்களுக்கு இவ்விருது
இது, உங்கள், இடம், விருது, மரியாதை


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:



வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

தமிழக அரசின் கல்வித்துறை சார்பில், ஒவ்வோர் ஆண்டும் சிறந்த ஆசிரியர்களுக்கு, 'டாக்டர் ராதாகிருஷ்ணன்' விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஆறு முதல் 12 ஆசிரியர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

கற்பித்தல் பணி மட்டுமின்றி பள்ளியை மேம்படுத்துதல், பொது சேவை, மாணவர் சேர்க்கையை உயர்த்துதல், சுற்றுச்சூழல் மற்றும் மாணவர் நலனில் அக்கறை, நல்லொழுக்கம் ஆகியவற்றையும் ஆய்வு செய்து, விருதுக்கு உரியோர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.மாவட்ட அளவில் முதன்மை கல்வி அலுவலர்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவும், அதற்கு பின் மாநில அளவில் ஒரு குழுவும், விருது பெறுவோர் இறுதி பட்டியலை முடிவு செய்கிறது.

ஆசிரியர்களில் 50 சதவீதம் பேர், 'நான் செய்துள்ள பணியை ஆய்வு செய்து விருது கொடுங்கள்' என்ற நோக்கில் விண்ணப்பிக்கின்றனர்.மீதமுள்ள 50 சதவீதம் பேர், ஆளுங்கட்சி மக்கள் பிரதிநிதிகளின் சிபாரிசுடன் விருது வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பெரும் தொகையை அன்பளிப்பாக கொடுப்பதன் வாயிலாகவும் விருது பெற முடியும் என்ற நிலை உள்ளது.இதை தடுக்க வேண்டும். 'சிறந்த ஆசிரியர்' என அரசு முன்மொழியும் நபர், அந்த விருதுக்கு பொருத்தமானவராக இருக்க வேண்டும்.


latest tamil news


ராதாகிருஷ்ணன் விருதில் அதிக அளவில் அரசியலும், ஊழலும் மலிந்து வருவதால், தகுதியான ஆசிரியர் பலர் அதற்கு விண்ணப்பிப்பதில் இருந்து விலகி நிற்கின்றனர். விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர் பற்றி பள்ளி நிர்வாகம், சக பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் என அனைவரிடமும், தேர்வு குழுவினர் விசாரிக்க வேண்டும். குறுக்கு வழியில் விருது பெற முயற்சிப்போருக்கு, ஆதரவு கரம் நீட்ட கூடாது.தகுதியானவருக்கு கிடைத்தால் தான் விருதுக்கு மரியாதை!

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUBBU - MADURAI,இந்தியா
26-செப்-202120:00:02 IST Report Abuse
SUBBU இந்த ஜாக்டோ ஜியோவில் உறுப்பினராக உள்ள எவனுக்கும் இந்த விருதை வாங்க யோக்கியதை இல்லை.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
26-செப்-202115:10:27 IST Report Abuse
r.sundaram செம்பட்டி ராமு அவர்கள் கனவு காண்கிறார். இந்த கழகங்கள் ஆட்சிகளில் தகுதியானவருக்கு விருதா? சிரிப்புத்தான் வருகிறது.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
26-செப்-202115:04:35 IST Report Abuse
மலரின் மகள் மரியாதைக்குரியவர்களுக்கு மட்டுமே விருது வழங்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X