அரசியல் செய்தி

தமிழ்நாடு

‛நிதியமைச்சருக்கு முதல்வர் அறிவுரை கூற வேண்டும்': அண்ணாமலை

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (40)
Share
Advertisement
சென்னை-''முதல்வர் பேசுவதற்கும், அமைச்சர்கள் நடந்து கொள்வதற்கும் சம்பந்தம் இல்லாமல் உள்ளது. நிதி அமைச்சர் தியாகராஜனுக்கு, முதல்வர் அறிவுரை கூற வேண்டும்,'' என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.பாரதிய ஜன சங்கத்தின் நிறுவன தலைவர்களில் ஒருவரான, பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின், 105வது பிறந்த நாள், சென்னை, தி.நகரில் உள்ள கமலாலயத்தில், நேற்று

சென்னை-''முதல்வர் பேசுவதற்கும், அமைச்சர்கள் நடந்து கொள்வதற்கும் சம்பந்தம் இல்லாமல் உள்ளது. நிதி அமைச்சர் தியாகராஜனுக்கு, முதல்வர் அறிவுரை கூற வேண்டும்,'' என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.



latest tamil news


பாரதிய ஜன சங்கத்தின் நிறுவன தலைவர்களில் ஒருவரான, பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின், 105வது பிறந்த நாள், சென்னை, தி.நகரில் உள்ள கமலாலயத்தில், நேற்று கொண்டாடப்பட்டது. தான் மட்டும் அறிவாளிஅதில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தமிழக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர், தீன்தயாள் உபாத்யாயாவின் உருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். மருத்துவ முகாம் நடத்தப்பட்டதுடன், அன்னதானமும் வழங்கப்பட்டது.

பின், அண்ணாமலை கூறியதாவது:அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி சிறப்பாக செயல்படுகிறது. உள்ளாட்சி தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். தி.மு.க., ஆட்சிக்கு வந்த, நான்கு மாதங்களில் ஏராளமான தவறுகளை செய்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கின்றன. பழிக்கு பழி கொலை செய்வதும் அதிகரித்துள்ளது.

தமிழக காவல் துறைக்கு, கம்பீரமான நல்ல பெயர் உள்ளது. எனவே, காவல் துறையினர் குற்றங்களை தடுக்க வேண்டும்.முதல்வர் ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு பிரச்னையில் தனி கவனம் செலுத்த வேண்டும். முதல்வர், அனைவரையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று எண்ணுகிறார். ஆனால், அவர் பேசுவதற்கும், அமைச்சர்கள் நடந்து கொள்வதற்கும் சம்பந்தம் இல்லாமல் உள்ளது.நிதி அமைச்சர் தியாகராஜன், பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறார்.


latest tamil news


தமிழகத்தில் தான் மட்டுமே அறிவாளி போல செயல்படுகிறார். அறிவு இருந்தால் மட்டும் ஒரு மனிதன், பெரிய ஆளாக வரலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏற்க கூடியது அல்லஆனால், அறிவை தாண்டி ஞானம், சமூக அக்கரை, மக்கள் மீது பாசம், இயல்பான அறிவு இருக்க வேண்டும்.நிதி அமைச்சர் பொறுப்பேற்றதில் இருந்து, பா.ஜ., தலைவர்கள் மீதும், தொண்டர்கள் மீதும் விமர்சனம் செய்து, சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அவருக்கு முதல்வர் அறிவுரை கூற வேண்டும்.ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்திற்கு செல்லாததற்கு, நிதி அமைச்சர் கூறும் காரணங்கள் ஏற்க கூடியது அல்ல. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Saravanan - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
28-செப்-202123:35:43 IST Report Abuse
Saravanan அவருக்கு அது இருந்தால் அவர் ஏன் டபுள் வாட்ச் டக்ளசுக்கு பதவி தர போறார் அவருக்கு தான் இல்லையே - அதாங்க அறிவு...
Rate this:
Cancel
26-செப்-202115:20:55 IST Report Abuse
அப்புசாமி சொன்னபடி பாஞ்சி லட்சம் போடலைன்னு மக்கள் காண்டா இருக்காங்கன்னு அமித் ஷா விடம் ரகசிய ரிப்போர்ட் குடுத்துருங்க அண்ணாச்சி...
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
26-செப்-202116:34:53 IST Report Abuse
madhavan rajanஉங்க கேட்டே அந்த பாஞ்சி லட்சம் பத்திரம் இருந்தா அனுப்பிடுங்கண்ணே அப்புசாமி தம்பி. நீட்டுக்கு பொய் சொன்னா மட்டும் நம்புறீங்க....
Rate this:
Suri - Chennai,இந்தியா
26-செப்-202118:53:09 IST Report Abuse
Suriநீட் விஷயம் இன்னும் ஒரு முடிவான நிலைக்கு வரல...
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
26-செப்-202115:00:28 IST Report Abuse
Vena Suna ஒன்று இல்லாதவருக்கு இல்லாதவர் வழங்கட்டும் என்று அது இல்லாத ஒருவர் சொல்லுவது நகைப்பு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X