சென்னை-''முதல்வர் பேசுவதற்கும், அமைச்சர்கள் நடந்து கொள்வதற்கும் சம்பந்தம் இல்லாமல் உள்ளது. நிதி அமைச்சர் தியாகராஜனுக்கு, முதல்வர் அறிவுரை கூற வேண்டும்,'' என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

பாரதிய ஜன சங்கத்தின் நிறுவன தலைவர்களில் ஒருவரான, பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின், 105வது பிறந்த நாள், சென்னை, தி.நகரில் உள்ள கமலாலயத்தில், நேற்று கொண்டாடப்பட்டது. தான் மட்டும் அறிவாளிஅதில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தமிழக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர், தீன்தயாள் உபாத்யாயாவின் உருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். மருத்துவ முகாம் நடத்தப்பட்டதுடன், அன்னதானமும் வழங்கப்பட்டது.
பின், அண்ணாமலை கூறியதாவது:அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி சிறப்பாக செயல்படுகிறது. உள்ளாட்சி தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். தி.மு.க., ஆட்சிக்கு வந்த, நான்கு மாதங்களில் ஏராளமான தவறுகளை செய்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கின்றன. பழிக்கு பழி கொலை செய்வதும் அதிகரித்துள்ளது.
தமிழக காவல் துறைக்கு, கம்பீரமான நல்ல பெயர் உள்ளது. எனவே, காவல் துறையினர் குற்றங்களை தடுக்க வேண்டும்.முதல்வர் ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு பிரச்னையில் தனி கவனம் செலுத்த வேண்டும். முதல்வர், அனைவரையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று எண்ணுகிறார். ஆனால், அவர் பேசுவதற்கும், அமைச்சர்கள் நடந்து கொள்வதற்கும் சம்பந்தம் இல்லாமல் உள்ளது.நிதி அமைச்சர் தியாகராஜன், பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறார்.

தமிழகத்தில் தான் மட்டுமே அறிவாளி போல செயல்படுகிறார். அறிவு இருந்தால் மட்டும் ஒரு மனிதன், பெரிய ஆளாக வரலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏற்க கூடியது அல்லஆனால், அறிவை தாண்டி ஞானம், சமூக அக்கரை, மக்கள் மீது பாசம், இயல்பான அறிவு இருக்க வேண்டும்.நிதி அமைச்சர் பொறுப்பேற்றதில் இருந்து, பா.ஜ., தலைவர்கள் மீதும், தொண்டர்கள் மீதும் விமர்சனம் செய்து, சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அவருக்கு முதல்வர் அறிவுரை கூற வேண்டும்.ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்திற்கு செல்லாததற்கு, நிதி அமைச்சர் கூறும் காரணங்கள் ஏற்க கூடியது அல்ல. இவ்வாறு, அவர் கூறினார்.