அன்னூர்:அன்னுாரில் தி.மு.க., கட்சி அலுவலகத்தை சுவாமி படங்கள் வைத்து, அமைச்சர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர்.கோவை மாவட்டம், அன்னுாரில் தி.மு.க.,வின் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது. லட்சுமி, சரஸ்வதி உள்ளிட்ட ஐந்து சுவாமி படங்கள் வைக்கப்பட்டு, அந்த படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, ஆகியோர் இரண்டு குத்துவிளக்குகளை ஏற்றி, விழாவில் பங்கேற்றனர். கட்சி தலைவர்களின் படங்களும் வைக்கப்பட்டிருந்தன.செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறுகையில், ''அன்னுார் ஒன்றியத்தில், தொழில்பேட்டைக்காக, 2,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இது குறித்து முதல்வரிடம் பேசி, விவசாய நிலங்கள் கையகப்படுத்தாமல் இருக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.