பொது செய்தி

இந்தியா

அரசியல் கள நிலவரம்

Added : செப் 26, 2021
Share
Advertisement
முதல்வரின் பாசம்!பூ கட்சிக்கு வட கர்நாடகா தான் கோட்டை. இங்கு மற்றவங்க முட்டி மோதினாலும் ஒண்ணுமே செய்ய முடியாதாம்.எனவே, மக்களோட ஆதரவுக்கு பிராய சித்தமாக அவர்களோட எதிர்ப்பார்ப்பு படி அபிவிருத்தி வேலைகள் செய்ய மூன்று நாளா சி.எம்., சுற்றுப்பயணத்தில் சுழலுகிறார். அவர்களிடம் பாசத்தை பொழிகிறாராம்.சி.எம்., வருகையால், வட கர்நாடகாவுக்கு வசந்த காலம் ஏற்படுவதாக கொண்டாட்டமாக

முதல்வரின் பாசம்!பூ கட்சிக்கு வட கர்நாடகா தான் கோட்டை. இங்கு மற்றவங்க முட்டி மோதினாலும் ஒண்ணுமே செய்ய முடியாதாம்.எனவே, மக்களோட ஆதரவுக்கு பிராய சித்தமாக அவர்களோட எதிர்ப்பார்ப்பு படி அபிவிருத்தி வேலைகள் செய்ய மூன்று நாளா சி.எம்., சுற்றுப்பயணத்தில் சுழலுகிறார்.

அவர்களிடம் பாசத்தை பொழிகிறாராம்.சி.எம்., வருகையால், வட கர்நாடகாவுக்கு வசந்த காலம் ஏற்படுவதாக கொண்டாட்டமாக இருக்காங்க. அடுத்த அசம்பிளி தேர்தலுக்கு திடமான பவுண்டேஷனை ஏற்படுத்த மக்கள் சக்தியை திரட்டுகிறாராம். இப்பவும், எப்பவும் காவிக் காரங்களுக்கு வட பகுதி மதிப்புன்னு பெருமை கிடைச்சிருக்கு.

வார்டுகளில் ரகசிய ஆய்வு! பூங்கா நகர் மாநகராட்சியில் எந்த வார்டு, யாருக்கு சாதகமா இருக்குதுன்னு, அலசி ஆராய, உளவுத்துறைக்கு முதல்வர் ஆர்டர் போட்டிருக்காரு.பூக்கார அசம்பளிக்காரர்கள் உள்ள வார்டுகளிலும் கூட, கை கட்சிக்கு சாதகமா இருப்பதாக சில இடங்கள் குறித்து சி.எம்.,கேட்டிருக்கிறாரு. கே.ஆர்.புரம் தொகுதி, காவி வசமா இருந்தாலும்

மாநகராட்சி கை பக்கமாவே சில வார்டுகள் இருக்குதாம். தொகுதிக்கு திரும்பிட்டாங்க!அசம்பிளி கூட்டத்தொடர் முடிந்து போயுள்ளது. 300, 400 கி.மீ., துாரத்தில் இருந்து வந்தவங்க, 12 நாட்களாக குடும்பத்தை விட்டு கேபிட்டலில் தங்கி இருந்தவங்க, அவங்க அவங்களோட சொந்த ஊருக்கு ரிட்டர்ன் ஆகிட்டாங்க. குடும்பத்தோட ஐக்கியமாயிட்டாங்க. தொகுதி நிலவரத்தை பற்றி பேச வந்தவங்க,

மந்திரிகளை சந்திச்சாங்க கோரிக்கை களை கொட்டினாங்க.தேர்தல் வரப்போவதால் மேம்பாட்டுக்கு நிதி கேட்டு பெற்ற மகிழ்ச்சியுடன் வேலைகளை துவங்க போறாங்களாம்.கொள்ளு பேரன் வந்த நேரம்!எல்லா கட்சிகளை காட்டிலும் புல்லுக்கட்டு கட்சிக்காரங்க ஓவர் ஸ்பீடில் இருக்காங்க. 224 தொகுதியிலும் வேட்பாளர் தயார் செய்திட்டாங்க.

தேசியக் கட்சிகளை திணறடிக்க 'வெயிட்' காட்டும் தேர்தலாக 2023 ல் மாற்றப்போறாங்களாம். அதுக்காக கோடீஸ்வரர்களை தேடி பிடிச்சிருக்காங்க. எலக் ஷன், கலெக் ஷன் செலவுக்கு பஞ்சம் இருக்காதாம். 100 பேர் ஜெயிக்க இப்பவே 'ஆப்ரேஷன்' திட்டம் நடந்திருக்கு. அசம்பிளி தேர்தலில் வெற்றி பெறுவோம் என 'மாஜி' பி.எம்., முகத்தில் புன்முறுவல் தெரியுதாம். கொள்ளு பேரன் வந்த மகிழ்ச்சியில், அவருக்கு கொண்டாட்டம் ரெட்டிப்பு ஆகியிருக்கு.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X