அணை நீரில் மூழ்கி மென்பொறியாளர் பலி | Dinamalar

பொது செய்தி

இந்தியா

அணை நீரில் மூழ்கி மென்பொறியாளர் பலி

Added : செப் 26, 2021
Share
சிக்கபல்லாபூர்: பிறந்த நாள் பார்ட்டி நடத்த ஐந்து நண்பர்களுடன் சுற்றுலா சென்ற மென்பொறியாளர், ஜக்கலமடகு அணையில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். பெங்களூரின் சுங்கதகட்டேவில் வசித்த ரோஹித், 24, தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றினார். சிக்கபல்லாபூரிலுள்ள, இவரது நண்பர் சந்தோஷ் பிறந்தநாளுக்காக, ஐந்து நண்பர்களுடன் சென்றிருந்தார். சிக்கபல்லாபூர் ஜக்கலமடகு அணைக்கு

சிக்கபல்லாபூர்: பிறந்த நாள் பார்ட்டி நடத்த ஐந்து நண்பர்களுடன் சுற்றுலா சென்ற மென்பொறியாளர், ஜக்கலமடகு அணையில் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

பெங்களூரின் சுங்கதகட்டேவில் வசித்த ரோஹித், 24, தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக பணியாற்றினார். சிக்கபல்லாபூரிலுள்ள, இவரது நண்பர் சந்தோஷ் பிறந்தநாளுக்காக, ஐந்து நண்பர்களுடன் சென்றிருந்தார். சிக்கபல்லாபூர் ஜக்கலமடகு அணைக்கு சென்று, நேற்று காலை மதுபானம் அருந்தி பார்ட்டி நடத்தினர். நண்பர்கள் அணைபபகுதியில் நீச்சலடித்தனர். அப்போது ரோஹித் குடிபோதையில், மரத்தின் மீதேறி 'செல்பி' எடுக்கும் போது, நிலை தடுமாறி நீரில் விழுந்து, மூழ்கி உயிரிழந்தார். நந்திமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X