சம்பவம் செய்தி

தமிழ்நாடு

36 மணி நேரத்தில் 2,512 ரவுடிகள் கைது: மாநிலம் முழுதும் அதிரடி

Added : செப் 26, 2021
Share
Advertisement
சென்னை-தமிழகத்தில் அதிரடி நடவடிக்கை வாயிலாக, 36 மணி நேரத்தில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, ஐந்து துப்பாக்கிகள், 929 கத்திகள் உட்பட 934 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தர வில், மாநிலம் முழுதும் 23ம் தேதி இரவு முதல், அதிரடி நடவடிக்கையாக ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.இதன் வாயிலாக, 36 மணி

சென்னை-தமிழகத்தில் அதிரடி நடவடிக்கை வாயிலாக, 36 மணி நேரத்தில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, ஐந்து துப்பாக்கிகள், 929 கத்திகள் உட்பட 934 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தர வில், மாநிலம் முழுதும் 23ம் தேதி இரவு முதல், அதிரடி நடவடிக்கையாக ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.இதன் வாயிலாக, 36 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 370 பழைய குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் மொத்தம் 2,512 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 244 பேர், நிலுவையில் உள்ள நீதிமன்ற பிடியாணையின்படி கைது செய்யப்பட்டனர்.பல்வேறு குற்ற வழக்குகளுக்காக 733 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.மேலும் 1,927 பேரிடம் நன்னடத்தைக்காக பிணை ஆணை பெறப்பட்டு விடுவிக்கப் பட்டனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் இருந்து ஐந்து நாட்டு துப்பாக்கிகள், 929 கத்திகள் உள்ளிட்ட பிற ஆயுதங்கள் என 934 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கொலை குற்றங்களில் ஈடுபடுகிற ரவுடி களுக்கு எதிரான, காவல் துறையின் இந்த கடுமையான நடவடிக்கைகள்தொடர்ந்து நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X