பொது செய்தி

தமிழ்நாடு

இன்று மெகா தடுப்பூசி முகாம்; நாளை ஊழியர்களுக்கு விடுமுறை

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை-''தமிழகம் முழுதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதால், பணியாளர்களுக்கு ஓய்வு தரும் வகையில், திங்கள் கிழமை தடுப்பூசி போடப்படாது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று நடந்த ரத்த தான சிறப்பு முகாமை, செயலர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்த பின் அளித்த பேட்டி:தமிழகத்தில் கொரோனா

சென்னை-''தமிழகம் முழுதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதால், பணியாளர்களுக்கு ஓய்வு தரும் வகையில், திங்கள் கிழமை தடுப்பூசி போடப்படாது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.



latest tamil news


சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று நடந்த ரத்த தான சிறப்பு முகாமை, செயலர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்த பின் அளித்த பேட்டி:தமிழகத்தில் கொரோனா பாதிப்பு லட்சங்களில் இருந்தது; ஆயிரமாக குறைத்து உள்ளோம். ஆனால், தற்போது 1,500ல் இருந்த தினசரி தொற்று எண்ணிக்கை, 1,700 ஆக அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் இருந்தாலும், கொரோனா சூழ்நிலையை புரிந்து பொது மக்கள் செயல்பட வேண்டும். தமிழகத்தில், 18 வயதுக்கு மேற்பட்டோரில் 56 சதவீதம் பேர், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.

இரண்டாவது தவணையை பொறுத்தவரை 17 சதவீதம் பேர் மட்டுமே செலுத்தி கொண்டுள்ளனர். அந்த வகையில், 22 லட்சம் பேர், இரண்டாம் தவணை செலுத்தி கொள்ளாமல் இருக்கின்றனர். முதியவர்கள் முதல் அனைவரும் கட்டாயம், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.அதேபோல, விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பொது மக்கள் கூட்டமாக கூடுவது, முக கவசங்களை முறையாக அணியாதது போன்றவற்றால் தொற்று அதிகரிக்கிறது.


latest tamil news


காய்ச்சல் வந்த உடனேயே காலதாமதம் செய்யாமல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.அடுத்த ஒரு மாதத்திற்குள் அனைவரும் தானாக முன்வந்து, முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். அதன்படி, ஞாயிற்றுக் கிழமை நடத்தப்படும் மெகா தடுப்பூசி முகாம்களை, மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஞாயிற்றுக் கிழமைகளில் பெரிய அளவில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவதால், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு ஓய்வு தரும் வகையில் திங்கள் கிழமை தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறாது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
26-செப்-202109:07:42 IST Report Abuse
RajanRajan ஏன் சாமி இந்த மெகா ஊசி திருவிழாவில் இலவச திராவிட குவாட்டர் பிரியாணி பொட்டலம் கொடுப்பங்களோ. அடேய் அது அவிங்க தேர்தல் வகுருதிலே இல்லையடா. ஓ அப்போ அந்த லஞ்ச ஊழலும் தேர்தல் வாக்குறுதிலே இல்லே அதனாலே அது என்ன இங்கே அரங்கேறாமலா இருக்கு. 2515 ரவுடிகள் ஒரே ராத்திரியிலே கைது எப்படி. இந்த அமைதி பூங்கவுலே இத்தனை பெரிய ரவுடி பட்டாளம். யாருடா உன்னை அந்த துண்டு சீட்டை எடுத்து படித்து பார்க்க சொன்னது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X