பொது செய்தி

இந்தியா

பறவைகள் சரணாலயமாக பள்ளிக்கரணை சாத்தியக்கூறுகளை ஆராய ஐகோர்ட் உத்தரவு

Added : செப் 26, 2021
Share
Advertisement
சென்னை : சென்னை, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் குழு அமைக்கும் படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கரணையில், அரசுக்கு சொந்தமான, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய, 66.70 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கொண்டாடி, போலி ஆவணங்கள் தயாரித்ததாக, போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ஒரு பகுதியாக,


சென்னை : சென்னை, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் குழு அமைக்கும் படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கரணையில், அரசுக்கு சொந்தமான, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய, 66.70 ஏக்கர் நிலத்துக்கு உரிமை கொண்டாடி, போலி ஆவணங்கள் தயாரித்ததாக, போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ஒரு பகுதியாக, இந்த நிலம் உள்ளது.இவ்வழக்கில் முன்ஜாமின் கோரி, உயர் நீதிமன்றத்தில் இருவர், 2012ல் மனுக்கள் தாக்கல் செய்தனர். நிபந்தனைகள்விதித்து இருவருக்கும், 2014ல் முன்ஜாமின் வழங்கப்பட்டது.வழக்கு விசாரணையின் போது, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நடக்கும் ஆக்கிரமிப்புகள், நில மாற்ற விபரங்கள் தெரிய வந்தது.இந்த வழக்கை விரிவாக விசாரித்த நீதிபதி கிருபாகரன், அரசிடம் இருந்து பல்வேறு தகவல்களை கோரினார். சதுப்பு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக, வனத்துறையிடம் இருந்தும் விரிவான அறிக்கை பெற்றார்.பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடர்பாக, பத்திரப்பதிவு மேற்கொள்ளக் கூடாது என, தமிழகத்தில் உள்ள அனைத்து பதிவாளர்களுக்கும் உத்தரவிட்டார்.சதுப்பு நிலத்தை சுற்றி வேலி அமைக்கவும் உத்தரவிட்டார். சதுப்பு நிலத்தை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கவும், நீதிமன்றத்துக்கு உதவ வழக்கறிஞர் டி.மோகன் நியமிக்கப்பட்டார். அவரும் நீதிமன்றத்துக்கு பரிந்துரைகள் வழங்கினார்.பணி ஓய்வுக்கு முன், இவ்வழக்கில் நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:முன்ஜாமின் கோரிய வழக்காக இது இருந்தாலும், சதுப்பு நிலத்தை பாதுகாக்கும் பொது நல நோக்கில், தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டியுள்ளது.

எனவே, கீழ்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது. பெருங்குடி, ஆலந்துாரில் உள்ள குப்பை கொட்டும் கூடத்தை, வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்; அங்கு, திடக்கழிவு கொட்டுவதை, கழிவு நீர் வெளியேற்றுவதையும் தடுக்க வேண்டும் ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து, சாத்தியக்கூறுகளை பரிசீலித்து, அவற்றை அகற்றி, வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் சட்டவிரோதமாக பெற்ற பட்டாக்களை கண்டறிந்து, ரத்து செய்ய வேண்டும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், வனம் சாராத நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும் பறவைகள் சரணாலயமாக பள்ளிக்கரணையை அறிவிக்க, சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் அரசு தொழிற் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டு, பயன்படுத்தப்படாத நிலங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் சதுப்பு நிலத்தை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் அடங்கிய குழுவை, அரசு நியமிக்க வேண்டும் இந்த குழு, சதுப்பு நிலத்தில் அமைந்துள்ளதாக கண்டறியும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், தனி நபர்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் சதுப்பு நிலத்தில் மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அனுமதிக்கக் கூடாது; சதுப்பு நிலத்துக்கு தண்ணீர் வருவதில் தடை இருந்தால், அதை அகற்ற வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.இந்த உத்தரவை அமல்படுத்தியதற்கான அறிக்கையை, 16 வாரங்களுக்கு பின், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X