பொது செய்தி

தமிழ்நாடு

விசாகப்பட்டினம் அருகே கரையை கடக்கத்துவங்கியது குலாப் புயல்

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021
Share
Advertisement
சென்னை-'கிழக்கு மத்திய வங்கக் கடலில் உருவான புயல், இன்று மாலை விசாகப்பட்டினம் - கோபால்பூர் இடையே கரையை கடக்கக்கூடும். இந்த புயலுக்கு குலாப் என பெயரிடப் பட்டுள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்திருந்தார். அதன்படி, தற்போது குலாப் புயல் கரையை கடக்கத்துவங்கியுள்ளது.அவரது அறிக்கை:கிழக்கு மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த

சென்னை-'கிழக்கு மத்திய வங்கக் கடலில் உருவான புயல், இன்று மாலை விசாகப்பட்டினம் - கோபால்பூர் இடையே கரையை கடக்கக்கூடும். இந்த புயலுக்கு குலாப் என பெயரிடப் பட்டுள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்திருந்தார். அதன்படி, தற்போது குலாப் புயல் கரையை கடக்கத்துவங்கியுள்ளது.



latest tamil news



அவரது அறிக்கை:கிழக்கு மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நேற்று வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டது. இது புயலாக மாறி, வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரையை ஒட்டி, விசாகப்பட்டினம் - கோபால்பூர் இடையே கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, இன்று தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். நாளை, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடி, மின்னலுடன் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்யும். தென் மாவட்டங்கள்,மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். நாளை மறுதினம், தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், மிதமான மழையும் பெய்யும்.வரும் 29ம் தேதி, கடலோரமாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவுமேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை, 35, குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஷியசாக இருக்கும்.


latest tamil news



கடந்த 24 மணி நேரத்தில்,அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில், 14 செ.மீ., மழை; திருச்சி மாவட் டம், மணப்பாறை, திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் தலா, 11 செ.மீ., மழையும் பெய்துள்ளது.இன்றும் நாளையும், குமரிக் கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசலாம் என்பதால், மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம். மேலும் விபரங்களுக்கு, imdchennai.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X