பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் இ.சி.ஆரில் 'சைக்கிளிங்'

Added : செப் 26, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மாமல்லபுரம் : முதல்வர் ஸ்டாலின், முட்டுக்காடு - மாமல்லபுரம் இடையே நேற்று 'சைக்கிளிங்' பயணம் சென்றார்.தமிழக முதல்வர் ஸ்டாலின், உடற்பயிற்சி அவசியம் கருதி, 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை, சைக்கிளிங் பயணம் செல்வது வழக்கம்குறிப்பாக, சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் கிழக்கு கடற்கரை சாலையில், நீலாங்கரை அல்லது முட்டுக்காடு பகுதியில் இருந்து, மாமல்லபுரம் வரை
 முதல்வர் ஸ்டாலின் இ.சி.ஆரில் 'சைக்கிளிங்'

மாமல்லபுரம் : முதல்வர் ஸ்டாலின், முட்டுக்காடு - மாமல்லபுரம் இடையே நேற்று 'சைக்கிளிங்' பயணம் சென்றார்.தமிழக முதல்வர் ஸ்டாலின், உடற்பயிற்சி அவசியம் கருதி, 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை, சைக்கிளிங் பயணம் செல்வது வழக்கம்

குறிப்பாக, சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் கிழக்கு கடற்கரை சாலையில், நீலாங்கரை அல்லது முட்டுக்காடு பகுதியில் இருந்து, மாமல்லபுரம் வரை செல்கிறார்.முதல்வராக பொறுப்பேற்ற பின், ஜூலை, 4ல், சைக்கிளிங் சென்றார். தொடர்ந்து நேற்று, முட்டுக்காடு - மாமல்லபுரம் வரை, சைக்கிளிங் பயண குழுவினருடன் சென்றார்.காலை 7:30 மணிக்கு தனியார் விடுதிக்கு வந்த அவர் ஓய்வெடுத்து, உணவு உண்டு, 9:15 மணிக்கு சென்னைக்கு காரில் சென்றார்.

அவரது பயணத்தின் போது, போக்குவரத்து நிறுத்தப்படாமல் வாகனங்கள் இயக்கப்பட்டன.மாமல்லபுரத்தில், பிரதான சாலையை தவிர்த்து, சர்வீஸ் சாலையில் கடந்தார். போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.மாமல்லபுரம் புறவழி சந்திப்பு துவங்கி, விடுதி பகுதி வரை, பேரூராட்சி துாய்மை பணியாளர்கள் சாலை பகுதியை துாய்மைப்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
26-செப்-202110:01:47 IST Report Abuse
ரமேஷ் முதல்வர் தினமும் காலையில் இதை தவிர வேறு ஒன்றும் செய்வதில்லையா
Rate this:
Cancel
Santi -  ( Posted via: Dinamalar Android App )
26-செப்-202106:40:29 IST Report Abuse
Santi எங்கள் ஊரில் சைக்கிள் ஓட்டினால், எங்கள் ஊரும் சுத்தம் ஆகும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X