நிதி அமைச்சர் ஜி.எஸ்.டி., கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்?

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (99)
Share
Advertisement
புதுடில்லி: லக்னோவில் நடந்த ஜி.எஸ்.டி கூட்டத்தில் பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். ஆனால் தமிழக நிதி அமைச்சர் கலந்து கொள்ளவில்லை. சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக பல செய்திகள் வெளிவந்தன.இந்த விவகாரம் டில்லி அரசியல் வட்டாரங்களிலும் அலசப்படுகிறது. தி.மு.க., - எம்.பி., ஒருவருக்கும், மத்திய அமைச்சருக்கும் இடையே நடந்த பேச்சு டில்லியில்

புதுடில்லி: லக்னோவில் நடந்த ஜி.எஸ்.டி கூட்டத்தில் பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். ஆனால் தமிழக நிதி அமைச்சர் கலந்து கொள்ளவில்லை. சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக பல செய்திகள் வெளிவந்தன.



latest tamil news


இந்த விவகாரம் டில்லி அரசியல் வட்டாரங்களிலும் அலசப்படுகிறது. தி.மு.க., - எம்.பி., ஒருவருக்கும், மத்திய அமைச்சருக்கும் இடையே நடந்த பேச்சு டில்லியில் பரபரப்பாகியுள்ளது.மத்திய அமைச்சரைச் சந்தித்த அந்த எம்.பி., 'எங்கள் நிதி அமைச்சர் தினமும் டுவிட்டரில் எதையாவது போட்டு குழப்பத்தை ஏற்படுத்துகிறார்' என, தெரிவித்துள்ளார்.

மேலும், 'பா.ஜ.,வில் அதிகம் படித்தவர் சுப்பிரமணியன் சுவாமி. காங்கிரசில் அதிகம் படித்தவர் சசி தரூர். அதே போல எங்கள் கட்சியில் அதிகம் படித்தவர் நிதி அமைச்சர். நாங்கள் என்ன செய்ய முடியும்' என, வருத்தப்பட்டுள்ளார் அந்த தி.மு.க., - எம்.பி.,


latest tamil news


அந்த மத்திய அமைச்சர், 'ஜி.எஸ்.டி., கூட்டத்தில் உங்கள் நிதி அமைச்சர் 20 ஆயிரம் கோடி ரூபாய் தொடர்பாக பேசியிருந்தால் அதை நிறைவேற்றிஇருப்போம். 'தமிழுக்காக உயிரையே விடுவோம் என நீங்கள் சொல்கிறீர்கள். உங்கள் நிதி அமைச்சருக்கு பட்ஜெட்டையே தமிழில் படிக்க முடியவில்லையே' என, கிண்டலடித்தாராம். இதற்கு தி.மு.க., - எம்.பி.,யால் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (99)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
28-செப்-202102:06:23 IST Report Abuse
meenakshisundaram வரலாறு கூறுவதை தெரியாதவர்களோ அல்லது வயதில் மிகவும் குறைந்தவர்களோ தான் அந்த கட்சியில் இருக்கிறாங்க .
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
26-செப்-202120:18:32 IST Report Abuse
SUBBU ஏம்பா அவர்தான் எனக்கு GST கூட்டம் முக்கியமில்லை என் கொளுந்தியா வளைகாப்புதான் முக்கியம்ணு சொல்லிட்டாரே அப்றம் ஏன் இன்னும் அவரை பிடித்து தொல்லை பண்றீங்க?அடுத்த GST க்கு அவர் கொளுந்தியாளுக்கு பிள்ளை பிறக்கும் அப்போதும் அவர் பிள்ளையை பாக்க போயிடுவார்.ஒரு நிதியமைச்சரை நிம்மதியாக இருக்க விட மாட்டீங்களா?
Rate this:
Cancel
Viswam - Mumbai,இந்தியா
26-செப்-202120:18:27 IST Report Abuse
Viswam இரட்டை கடிகாரத்தை பத்தி கணியக்காவே புலம்புவதை பாத்து அப்படியே ஷாக்காயிட்டேன் அப்ப அந்த பொருளாதார புலிங்க அஞ்சுபேரும் சொன்ன மாதிரி இரட்டை கடிகாரம் நடந்துக்கலையா அல்லது அவங்க எல்லாரும் கூட்டத்துக்கு போகாதேன்னு சொல்லற அளவுக்கு கீழே திமுக அளவுக்கு இறங்கிட்டாங்களா? ஒன்னும் புரியலயையே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X