பொது செய்தி

தமிழ்நாடு

முந்திரிக்கு நபார்டு மூலம் கடனுதவி

Added : செப் 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பண்ருட்டி : முந்திரிக்கு நபார்டு வங்கி மூலம் கடனுதவி வழங்க வேண்டும் என முந்திரி ஏற்றுமதியாளர் சங்க மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் பேசினார்.கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் ஏற்றுமதியாளருக்கான கருத்தரங்கம் நடந்தது. மாவட்ட தொழில் மைய மேலாளர் வெங்கடேசன் வரவேற்றார். சிறு,குறு நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் அசோக், கடலுார் சேம்பர் ஆப்
 முந்திரிக்கு நபார்டு மூலம் கடனுதவி

பண்ருட்டி : முந்திரிக்கு நபார்டு வங்கி மூலம் கடனுதவி வழங்க வேண்டும் என முந்திரி ஏற்றுமதியாளர் சங்க மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் பேசினார்.

கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் ஏற்றுமதியாளருக்கான கருத்தரங்கம் நடந்தது. மாவட்ட தொழில் மைய மேலாளர் வெங்கடேசன் வரவேற்றார். சிறு,குறு நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் அசோக், கடலுார் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் சண்முகம், நபார்டு வங்கி மேலாளர் விஜய்நிஹர் உட்பட பலர் பங்கேற்றனர்.

தமிழக முந்திரி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன் பேசுகையில், மத்திய, மாநில அரசுகள் முந்திரி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், மத்திய வர்த்தக அமைச்சகம், மாவட்ட நிர்வாகம் சார்பில் முந்திரி பயிரை பாதுகாக்க எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டும் வகையில் உள்ளது. முந்திரி தொழில் நடக்க 24 மணி நேர தொடர் மின்சார விநியோகம் அளிக்க வேண்டும். இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு ஊக்க தொகை 5 சதவீதமாக வழங்க வேண்டும். அரசின் புதிய திட்டத்தில் உள்ள மூலதனத்தின் மதிப்பை நீக்க வேண்டும். முந்திரி மற்றும் முந்திரி சார்ந்த பொருட்களுக்கு நபார்டு வங்கியின் மூலம் அதிக கடனுதவி அளித்தால் உற்பத்தி அதிகரிக்கும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
26-செப்-202112:59:19 IST Report Abuse
duruvasar இந்த கடன் வழங்கும் திட்டத்திற்க்கு "கருணா முன்கொட்டைபருப்பு உதவித்தொகை திட்டம்" என தமிழ் பெயர் சூட்டவேண்டும் என்றே தமிழ்கூறும் நல்லுலகம் விரும்புகிறது. மோடி செவி சாய்பாரா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X