பொது செய்தி

இந்தியா

கல்வியியல் கல்லுாரியில் சேர்க்கை அரசு ஊழியர் சம்மேளனம் கோரிக்கை

Added : செப் 26, 2021
Share
Advertisement
புதுச்சேரி : 'கூட்டுறவு கல்வியியல் கல்லுாரி மாணவர் சேர்க்கை தொடர்பாக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.சம்மேளன பொதுச்செய லாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லுாரி கடந்த 16 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இக்கல்லுாரியில் வரும் 2021-22ம் கல்வியாண்டிற்கான

புதுச்சேரி : 'கூட்டுறவு கல்வியியல் கல்லுாரி மாணவர் சேர்க்கை தொடர்பாக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

சம்மேளன பொதுச்செய லாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி கூட்டுறவு கல்வியியல் கல்லுாரி கடந்த 16 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இக்கல்லுாரியில் வரும் 2021-22ம் கல்வியாண்டிற்கான பி.எட்., சேர்க்கை சென்டாக் மூலம் இதுவரை துவக்கப்படவில்லை.தேசிய ஆசிரியர் கல்விக் குழும விதிகளின்படி, போதிய கட்டடம், இட வசதி இல்லாததால் கல்லுாரியின் அங்கீகாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது, ஆசிரியர் படிப்பிற்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை, வரும் 30ம் தேதி முடிவடைய உள்ளது. எனவே, புதுச்சேரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, முதல்வர் ரங்கசாமி இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, பி.எட்., மாணவர் சேர்க்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X