பொது செய்தி

இந்தியா

ஓட்டு எண்ணும் மையங்களுக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு

Added : செப் 26, 2021
Share
Advertisement
புதுச்சேரி : ஓட்டு எண்ணும் மையங்களுக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்திட மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள இரு நகராட்சிகள், 5 கொம்யூன் பஞ்சாயத்து தேர்தலுக்காக நான்கு ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட உள்ளது.அதில், புதுச்சேரி நகராட்சி ஓட்டுகள், லாஸ்பேட்டையில் உள்ள மகளிர்

புதுச்சேரி : ஓட்டு எண்ணும் மையங்களுக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்திட மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள இரு நகராட்சிகள், 5 கொம்யூன் பஞ்சாயத்து தேர்தலுக்காக நான்கு ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட உள்ளது.அதில், புதுச்சேரி நகராட்சி ஓட்டுகள், லாஸ்பேட்டையில் உள்ள மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியிலும், உழவர்கரை நகராட்சி ஓட்டுகள் லாஸ்பேட்டை மோதிலால் நேரு

அரசு பாலிடெக்னிக் கல்லுாரியிலும் எண்ணப்படும்வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஓட்டுகள் லாஸ்பேட்டை தாகூர் அரசு கல்லுாரியிலும், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஓட்டுகள் லாஸ்பேட்டை மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில் எண்ணப்பட உள்ளது.பாகூர், அரியாங்குப்பம், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துகளின் ஓட்டுகள், புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் எண்ணப்பட உள்ளது.இந்த மையங்களில், ஓட்டுப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்காக 'ஸ்ட்ராங் ரூம்' மற்றும் ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த மையங்களை மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் பூர்வா கார்க், நேற்று ஆய்வு செய்தார்.ஓட்டு எண்ணும் மையம் மற்றும் ஸ்ட்ராங் ரூம்களில் தேவையான வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட்டார். மேலும், ஓட்டு எண்ணும் மையங்களுக்கு மூன்றடுக்கில் போலீஸ் பாதுகாப்பு அளித்திட உத்தரவிட்டார்.ஆய்வின்போது, தேர்தல் நடத்தும் அதிகாரிகள், ஓட்டு எண்ணிக்கை நோடல் அதிகாரி, பொதுப்பணித் துறை, மின்துறை, போலீஸ், தேசிய தகவல் மையம், பி.எஸ்.என்.எல்., மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X