பொது செய்தி

இந்தியா

மியாட் இருதயவியல் சிகிச்சை நிபுணர் புதுச்சேரியில் மருத்துவ ஆலோசனை

Added : செப் 26, 2021
Share
Advertisement
புதுச்சேரி : சென்னை மியாட் மருத்துவமனையின் இருதயவியல் மற்றும் மின் இயற்பியல் துறை இயக்குனர் ஜெய்சங்கர், நேற்று புதுச்சேரிக்கு வந்து, மருத்துவ ஆலோசனை வழங்கினார்.இந்த ஆலோசனை முகாம், அம்பாள் நகர் மெயின் ரோடு, ராஜிவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை பின்புறம் அமைந்துள்ள தி பாஷ் மருத்துவமனையில், மாலை 5.௦௦ மணி முதல் இரவு 9.௦௦ வரை நடந்தது.இம்முகாமில் மார்பு வலி,

புதுச்சேரி : சென்னை மியாட் மருத்துவமனையின் இருதயவியல் மற்றும் மின் இயற்பியல் துறை இயக்குனர் ஜெய்சங்கர், நேற்று புதுச்சேரிக்கு வந்து, மருத்துவ ஆலோசனை வழங்கினார்.

இந்த ஆலோசனை முகாம், அம்பாள் நகர் மெயின் ரோடு, ராஜிவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை பின்புறம் அமைந்துள்ள தி பாஷ் மருத்துவமனையில், மாலை 5.௦௦ மணி முதல் இரவு 9.௦௦ வரை நடந்தது.இம்முகாமில் மார்பு வலி, அசவுகரியம், வியர்த்தல், சோர்வு, உணர் வின்மை, தலைசுற்றல், கை, கால், தாடைகளில் அதிகரிக்கும் வலி, கால்களில் வீக்கம், படபடப்பு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறி உள்ளவர்கள் ஆலோசனை பெற்றனர்.இதய நோய், திடீர் இதய நோய் மரணங்கள் ஏற்பட்ட குடும்ப வரலாறு, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது.மேலும், ஆஞ்சியோகிராம்,

ஆஞ்சியோ பிளாஸ்டிக் ஸ்டெண்டிங், பைபாஸ் அறுவை சிகிச்சை, இதய மாற்று அறுவை சிகிச்சை, பேஸ்மேக்கர்கள், இதய வால்பு பழுது மற்றும் மாற்றம் செய்து கொண்டவர்கள், இந்த முகாமில் பங்கேற்று சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர்.ஏற்பாடுகளை, சென்னை மியாட் மருத்துவமனை, தி பாஷ் மருத்துவமனை இணைந்து செய்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X