பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கல்

Added : செப் 26, 2021
Share
புதுச்சேரி : பள்ளி துவங்கி, 23 நாட்களுக்குப் பிறகு பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடப்புத்தகம் நேற்று வழங்கப்பட்டது.புதுச்சேரியில், கொரோ னா தொற்று பரவல் குறைந்துள்ளதால், கடந்த 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.முதல் கட்டமாக, 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வாரத்தில் மூன்று நாட்களுக்கு அரை நாள் மட்டும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறந்த

புதுச்சேரி : பள்ளி துவங்கி, 23 நாட்களுக்குப் பிறகு பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடப்புத்தகம் நேற்று வழங்கப்பட்டது.புதுச்சேரியில், கொரோ னா தொற்று பரவல் குறைந்துள்ளதால், கடந்த 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.முதல் கட்டமாக, 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வாரத்தில் மூன்று நாட்களுக்கு அரை நாள் மட்டும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

பள்ளிகள் திறந்த போதும், பாடப்புத்தகம் வழங்காததால், மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.புதுச்சேரி மற்றும் காரைக் கால் மாவட்டங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு ரூ.4.47 கோடி செலவில் பாடப்புத்தகம் வாங்கிட கவர்னர் ஒப்புதல் அளித்தார்.அதையடுத்து, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், தமிழ்நாடு பாடநுால் கழகத்தில் பாடப்புத்தகங்களை கொள்முதல் செய்து வருகின்றனர்.முதல்கட்டமாக பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடப் புத்தகங்கள் வந்தடைந்துள்ளன. அவற்றை கல்வித்துறை அதிகாரிகள் நேற்று அந்தந்த பள்ளிகளுக்கு நேர டியாக அனுப்பி வைத்தனர்.நேற்று பள்ளிக்கு வருகை தந்த பிளஸ் 2 மாணவர்களுக்கு தாவரவியல் பாடபுத்தகம் தவிர்த்து பிற பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது. பிளஸ் 1 வகுப்பு மாண வர்களுக்கு நாளை 27ம் தேதி வழங்கப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X