அமித் ஷாவின் திட்டம்

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு செல்வ கணபதியை பா.ஜ.,வில்இருந்து வேட்பாளராக்கி உள்ளனர். தன் கட்சிக்கு எம்.பி., பதவி வேண்டும் என முதல்வர் ரங்கசாமி விரும்பினாலும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ, 'இந்த பதவி பா.ஜ.,விற்கு தான் வேண்டும்' என, கறாராக கூறி விட்டார்.மத்திய இணை அமைச்சர் முருகனுக்கு இந்த ராஜ்யசபா 'சீட்'டை கொடுத்திருக்கலாமே என பலர் கேட்டாலும், 'அவருக்கு மத்திய
அமித் ஷா, திட்டம், ராஜ்யசபா, எம்.பி., பதவி

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு செல்வ கணபதியை பா.ஜ.,வில்இருந்து வேட்பாளராக்கி உள்ளனர். தன் கட்சிக்கு எம்.பி., பதவி வேண்டும் என முதல்வர் ரங்கசாமி விரும்பினாலும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ, 'இந்த பதவி பா.ஜ.,விற்கு தான் வேண்டும்' என, கறாராக கூறி விட்டார்.

மத்திய இணை அமைச்சர் முருகனுக்கு இந்த ராஜ்யசபா 'சீட்'டை கொடுத்திருக்கலாமே என பலர் கேட்டாலும், 'அவருக்கு மத்திய பிரதேசத்திலிருந்து சீட் கொடுக்கப்பட்டு விட்டது. 'செல்வ கணபதியின் நியமனத்திற்கு பின் அமித் ஷாவின் பல திட்டங்கள் உள்ளன' என்கின்றனர், பா.ஜ.,வினர்.

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்த செல்வ கணபதி புதுச்சேரியில் மட்டுமன்றி தமிழகத்திலும் பா.ஜ., வளர்ச்சிக்கு உதவுவார் என அமித் ஷா நம்புகிறாராம். புதுச்சேரி எல்லையில் உள்ள தமிழக பகுதிகளில் பா.ஜ.,வை பலப்படுத்த செல்வ கணபதியை வைத்து திட்டம் போட்டுள்ளாராம் அமித் ஷா.


கவர்னருக்கு அனுப்புங்கள்!தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஒவ்வொரு வாரமும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு ஒரு குறிப்பு அனுப்புகிறார். அதில் தமிழக அரசியல் நிலை, சட்டம் ஒழுங்கு நிலை, பயங்கரவாதம் என பல விஷயங்களை தெரிவித்து வருகிறார். தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது மத்திய அரசுக்கும், பா.ஜ., தலைவர்களுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக இதைச் செய்து வருகிறார்.

இந்நிலையில் உள்துறை அமைச்சகத்திலிருந்து அண்ணாமலைக்கு ஒரு தகவல் வந்தது.'உள்துறை அமைச்சகத்திற்கு நீங்கள் ஒவ்வொரு வாரமும் அனுப்பும் இந்த குறிப்பை தமிழக கவர்னருக்கும் அனுப்புங்கள் அல்லது அவரைச் சந்தித்து தகவல் தெரிவியுங்கள்' என, அதில் கூறப்பட்டுள்ளது.


பாலுவிற்கு இடம் இல்லைலோக்சபா, ராஜ்யசபா என இரண்டு சபைகளுக்குமே தனி தனியாக, 'டிவி' சானல்கள் இருந்தன. தற்போது இரண்டை யும் ஒன்றாக்கி, 'சன்சத் டிவி' என்ற பெயரில் இயங்கி வருகிறது. இந்த 'டிவி' யின் விவாதங்களில் கட்சி தலைவர்கள் பங்கேற்பர். தங்கள் கட்சி சார்பாக யார் விவாதங்களில் கலந்து கொள்வர் என்பதை கட்சி தலைமை சபாநாயகருக்கு தெரிவிக்கும். தி.மு.க., சார்பாக திருச்சி சிவா பங்கேற்பதாக சபாநாயகருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.ஆர்.பாலு பெயர் இதில் இடம் பெறாதது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி சிவா நீண்ட காலமாக எம்.பி.,யாக இருப்பவர். பழகுவதற்கு இனிமையானவர். அனைத்து கட்சி தலைவர்களுடனும் சுமுகமான உறவு வைத்திருப்பவர். வட மாநில பத்திரிகையாளர்களுடன் நட்பில் இருப்பவர். இதனால் தான் தி.மு.க., இவரை தேர்வு செய்துள்ளது. அ.தி.மு.க., சார்பில் தம்பிதுரை 'டிவி' விவாதங்களில் பங்கேற்கவுள்ளார்.


நிதி அமைச்சர் பங்கேற்காதது ஏன்?லக்னோவில் நடந்த ஜி.எஸ்.டி கூட்டத்தில் பல்வேறு மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். ஆனால் தமிழக நிதி அமைச்சர் கலந்து கொள்ளவில்லை. சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக பல செய்திகள் வெளிவந்தன.இந்த விவகாரம் டில்லி அரசியல் வட்டாரங்களிலும் அலசப்படுகிறது. தி.மு.க., - எம்.பி., ஒருவருக்கும், மத்திய அமைச்சருக்கும் இடையே நடந்த பேச்சு டில்லியில் பரபரப்பாகியுள்ளது.மத்திய அமைச்சரைச் சந்தித்த அந்த எம்.பி., 'எங்கள் நிதி அமைச்சர் தினமும் டுவிட்டரில் எதையாவது போட்டு குழப்பத்தை ஏற்படுத்துகிறார்' என, தெரிவித்துள்ளார். மேலும், 'பா.ஜ.,வில் அதிகம் படித்தவர் சுப்பிரமணியன் சுவாமி. காங்கிரசில் அதிகம் படித்தவர் சசி தரூர். அதே போல எங்கள் கட்சியில் அதிகம் படித்தவர் நிதி அமைச்சர். நாங்கள் என்ன செய்ய முடியும்' என, வருத்தப்பட்டுள்ளார் அந்த தி.மு.க., - எம்.பி., அந்த மத்திய அமைச்சர், 'ஜி.எஸ்.டி., கூட்டத்தில் உங்கள் நிதி அமைச்சர் 20 ஆயிரம் கோடி ரூபாய் தொடர்பாக பேசியிருந்தால் அதை நிறைவேற்றிஇருப்போம். 'தமிழுக்காக உயிரையே விடுவோம் என நீங்கள் சொல்கிறீர்கள். உங்கள் நிதி அமைச்சருக்கு பட்ஜெட்டையே தமிழில் படிக்க முடியவில்லையே' என, கிண்டலடித்தாராம். இதற்கு தி.மு.க., - எம்.பி.,யால் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை.


ரகசிய பயணம்!அவர் தி.மு.க., பிரமுகரின் உறவினர். கடந்த சில ஆண்டுகளாக டில்லி வந்து அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார். இவருக்கு டில்லியில் ஒரு வீடும் இருப்பதாக கூறப்படுகிறது. இவர் டில்லி வந்து போவது மிகவும் ரகசியமாக இருக்கும். சமீபத்தில் இவர் டில்லி வந்து ஒரு வாரம் தங்கியிருந்தார். 'வழக்கமாக ஓரிரு நாட்கள் மட்டுமே டில்லியில் தங்கக் கூடியவர் ஏன் ஒரு வாரம் டேரா போட்டார்' என, தி.மு.க., - எம்.பி.,க்கள் ஆச்சிரியப்படுகின்றனர். அவர் தங்கியிருந்த ஒரு வாரத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசினார். இதைத் தவிர சில சீனியர் மத்திய அரசு அதிகாரிகளையும் பார்த்து பேசியுள்ளார். கர்நாடக பா.ஜ.,வைச் சேர்ந்த ஒரு தலைவர் வாயிலாக அடிக்கடி மத்திய அமைச்சர்களை சந்தித்து வருகிறார் இந்த தி.மு.க., பிரமுகர். காங்கிரசை மட்டுமே நம்பி தமிழகத்தில் அரசியல் நடத்த முடியாது என்பதால், அவர் பா.ஜ., உட்பட மற்ற கட்சி தலைவர்களிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
26-செப்-202114:44:26 IST Report Abuse
Visu Iyer நாட்டு வளர்ச்சியை பற்றி சிந்தித்து அந்தெந்த மாநில அதிகாரிகளுடன் பேச வேண்டிய உள்துறை கட்சி வளர்ச்சி பற்றி பேசுகிறது... இவர்களுக்குக் மக்கள் பணத்தில் சம்பளம்... இவர்களை நம்பியா ஆரோக்கியமான இந்தியாவை கொடுக்க போறீங்க....?
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
26-செப்-202112:56:50 IST Report Abuse
vpurushothaman எம்.பி.யா இருந்தால்தான் தாமரை வளருமா ? தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளு மன்ற உறுப்பினருக்கு அமைச்சர் பதவி வழங்காமலிருப்பதே ஒரு தடை. ஆதிக்க அரசியலை விட்டு அணுகுமுறை அரசியலை அமித்ஷா கடைபிடிக்க வேண்டும்.
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
26-செப்-202111:25:34 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் புதுச்சேரி ரவுடிகளின் அட்டகாசத்துக்கு பேமசு அதை ஒழிக்க ஆவன செய்வாரா அமித் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X