அக்டோபரில் மட்டும் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (24)
Advertisement
புதுடில்லி: பண்டிகைகள் நிறைந்த அக்., மாதத்தில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை என்பதால் பொதுமக்கள் தங்கள் வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.நாடு முழுதும் வங்கிகளுக்கு இரண்டாவது மற்றும் நான்காவது சனிக் கிழமைகளில் முழு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதன்படி இந்தாண்டு அக்., 9, 23 ஆகிய இரண்டு நாட்களும் முழு விடுமுறை. அக்., 2

புதுடில்லி: பண்டிகைகள் நிறைந்த அக்., மாதத்தில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை என்பதால் பொதுமக்கள் தங்கள் வங்கிப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.latest tamil news


நாடு முழுதும் வங்கிகளுக்கு இரண்டாவது மற்றும் நான்காவது சனிக் கிழமைகளில் முழு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதன்படி இந்தாண்டு அக்., 9, 23 ஆகிய இரண்டு நாட்களும் முழு விடுமுறை. அக்., 2 சனிக்கிழமையன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை. அக்., 3, 10, 17, 24, 31 ஆகிய ஐந்து நாட்களும் ஞாயிற்றுக் கிழமை. இது தவிர அக்., 14, 15ல் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை. அக்., 19ல் மிலாடி நபி விடுமுறை. மேற்கண்ட 11 நாட்களும் நாடு முழுதும் வங்கிகளுக்கு முழு விடுமுறை. மேலும், 10 நாட்கள் சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


அதன் விபரம்:
அக்., 1 அரையாண்டு கணக்கு முடிவு சிக்கிம்

அக்., 6 மஹாளய அமாவாசை திரிபுரா, கர்நாடகா, மேற்கு வங்கம்

அக்., 7 மேரா சவுரென் ஹவுபா லெய்னினங்தோ சனமஹி மணிப்பூர்

அக்., 12 மஹா சப்தமி திரிபுரா, கர்நாடகா

அக்., 13 மஹா அஷ்டமி திரிபுரா, ஒடிசா, சிக்கிம், அசாம், மணிப்பூர், மேற்கு வங்கம், பீஹார், ஜார்க்கண்ட்.

அக்., 16 துர்கா பூஜா சிக்கிம்

அக்., 18 கதி பிஹு அசாம்

அக்., 20 மகரிஷி வால்மிகி ஜெயந்தி திரிபுரா, கர்நாடகா, சண்டிகர், மேற்கு வங்கம், ஹிமாச்சல பிரதேசம்

அக்., 22 மிலாடிநபியை தொடர்ந்து வரும் வெள்ளி ஜம்மு - காஷ்மீர்

அக்.,26 அக்செஷன் டே ஜம்மு - காஷ்மீர்

இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
26-செப்-202121:43:46 IST Report Abuse
Natarajan Ramanathan ஒரு விஷயம் தெரிந்து கொள்ளுங்கள். பழைய காலம் மாதிரி இப்போது நேரடி வங்கி சேவை குறைந்துவிட்டது. நீங்கள் நாடு முழுதும் உள்ள இரண்டு லட்சம் ATM களில் 24மணி நேரமும் பணம் எடுக்கவும் உங்கள் வீடுகளில் 24மணி நேரமும் ஆன்லைனில் பணபரிவர்த்தனைகள் செய்யவும், பில் பேமெண்ட்கள் செய்யவும், ரயில் விமான பேருந்து டிக்கட்கள் புக்கிங் செய்யவும் மூன்று ஷிப்ட்களில் (24 மணி) பிண்ணனியில் வங்கி ஊழியர்களின் பங்கு இருக்கிறது. இப்போது கிளைகளில் நடப்பது சுமார் 40 சதம் பணிகள் மட்டுமே.
Rate this:
Cancel
PRAKASH.P - chennai,இந்தியா
26-செப்-202119:51:44 IST Report Abuse
PRAKASH.P Then give holiday to everyone in this country.. poor labour laws
Rate this:
Cancel
R S BALA - CHENNAI,இந்தியா
26-செப்-202116:28:43 IST Report Abuse
R S BALA வங்கி பற்றிய ஒரு சமீபத்தில் ஒரு மீம்ஸ் படித்தது நினைவுக்கு வருகிறது .. அக்டோபரில் மட்டும் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை:- இதற்கு வாடிக்கையாளரின் மைண்ட் வாய்ஸ் .. என்கிட்ட இருக்குற மினிமம் பாலன்ஸ்யம் எடுத்துகுவ.. லோன் கேட்டாலும் குடுக்கமாட்ட, நீ 365 நாள் விடுமுறை விட்டா கூட எனக்கு கவலை இல்ல ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X