சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பில்லி, சூனியம் எடுப்பதாக மோசடி ரூ.80 லட்சம் சுருட்டிய 4 பேர் கைது

Added : செப் 26, 2021
Share
Advertisement
தாம்பரம்;தாம்பரத்தில், பில்லி, சூனியம் எடுப்பதாக கூறி, மூன்று பெண்களிடம், 80 லட்சம் ரூபாய் ஏமாற்றிய, இரண்டு பெண்கள் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.தாம்பரம், கன்னடபாளையத்தைச் சேர்ந்தவர்கள் அந்தோணியம்மாள், 41, கற்பகம், 35. இருவரும், கணவரை பிரிந்து தனியாக வசிக்கின்றனர். மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் பாத்திமா, 40.அந்தோணியம்மாள், கற்பகத்திற்கு, யாரோ பில்லி, சூனியம்

தாம்பரம்;தாம்பரத்தில், பில்லி, சூனியம் எடுப்பதாக கூறி, மூன்று பெண்களிடம், 80 லட்சம் ரூபாய் ஏமாற்றிய, இரண்டு பெண்கள் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.தாம்பரம், கன்னடபாளையத்தைச் சேர்ந்தவர்கள் அந்தோணியம்மாள், 41, கற்பகம், 35. இருவரும், கணவரை பிரிந்து தனியாக வசிக்கின்றனர். மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் பாத்திமா, 40.அந்தோணியம்மாள், கற்பகத்திற்கு, யாரோ பில்லி, சூனியம் வைத்திருப்பதாக, பாத்திமா உள்ளிட்ட நான்கு பேர் கூறியுள்ளனர். அதனால் தான் குடும்பத்தில் பிரச்னை ஏற்படுவதாகவும், கணவரை இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் கூறியுள்ளனர்.மந்திரம் மூலம் சூனியத்தை எடுத்தால், குடும்பத்தில் பிரச்னை தீரும் என்றும், பிரிந்த கணவர்கள் சேர்ந்துவிடுவர் என்றும் கூறியுள்ளனர்.ஓராண்டாக, எலுமிச்சை பழம், பூசணிக்காய், பொம்மை ஆகியவற்றை வைத்து பூஜை செய்வது போல் நடித்து, சிறிது சிறிதாக அந்தோணியம்மாள், கற்பகத்திடம், தலா, 30 லட்சம் ரூபாய் மற்றும் கற்பகத்தின் தங்கை அனிதாவிடம், 20 லட்சம் ரூபாய் என, 80 லட்சம் ரூபாயை ஏமாற்றியுள்ளனர்.அந்த பணத்தை வைத்து, இரும்புலியூர், சந்திரன் நகர், பாத்திமா தெருவில் சொகுசு பங்களா கட்டி, அங்கு, பாத்திமா குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில், பாத்திமா ஏமாற்றுவதை உணர்ந்து, அந்தோணியம்மாள் உள்ளிட்ட மூவர், தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி, பாத்திமா, 40, அவரது சகோதரர் அபு ஹசன், 35, சகோதரி ரஹமது பீவி நிஷா, 29, அபு ஹசனின் நண்பர் ராஜேந்திரன், 42, ஆகிய நான்கு பேரை, நேற்று கைது செய்தனர். பாத்திமா கூட்டாளிகள் வேறு யார், யாரிடம் ஏமாற்றியுள்ளனர் என்பது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X