பொது செய்தி

தமிழ்நாடு

போலீசாருக்கான குறைதீர் முகாம் தேதிகள் அறிவிப்பு

Added : செப் 26, 2021
Share
Advertisement
சென்னை:போலீசாரின் குறைதீர் முகாம்கள் மூன்று பிரிவு களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது.இதுகுறித்து, தமிழக காவல் துறை தலைமை இயக்குனரக அறிக்கை:'உங்கள் துறையில் முதல்வர்' திட்டத்தின் கீழ், காவலர்களின் குறைகளை களைவது குறித்த குறைதீர் முகாம், காவல் கண்காணிப்பாளர், காவல் ஆணையாளர் மற்றும் காவல் துறை தலைவர்கள் தலைமையில் நடத்தப்பட உள்ளது.அதன்படி வரும் 30ம் தேதி,

சென்னை:போலீசாரின் குறைதீர் முகாம்கள் மூன்று பிரிவு களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது.இதுகுறித்து, தமிழக காவல் துறை தலைமை இயக்குனரக அறிக்கை:'உங்கள் துறையில் முதல்வர்' திட்டத்தின் கீழ், காவலர்களின் குறைகளை களைவது குறித்த குறைதீர் முகாம், காவல் கண்காணிப்பாளர், காவல் ஆணையாளர் மற்றும் காவல் துறை தலைவர்கள் தலைமையில் நடத்தப்பட உள்ளது.அதன்படி வரும் 30ம் தேதி, காவல் கண்காணிப்பாளர், காவல் துறை துணை தலைவர், காவல் ஆணையர் ஆகியோர் தலைமையில் குறைதீர் கூட்டம் நடத்தப்படும். அதன்பின், அக்., 15ம் தேதி வெள்ளிக்கிழமை, காவல் துறை தலைவர் தலைமையில் குறைதீர் கூட்டம் நடத்தப்படும்.குறைதீர் முகாம்கள் நடத்தி முடித்த பின், அக்., 1 முதல் 16 வரை, குறைதீர் முகாமில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை, குறை தீர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிய விபரங்களை தலைமை அலுவலகத்திற்கு, dgptngenonesection@gmail.com என்ற மின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும்.முகாம்களில் தீர்க்கப்படாத காவலர்களின் குறைகளை மனுவாக, காவல் துறை தலைமை இயக்குனர் அலுவலகத்திற்கு, அக்., 25க்குள் அனுப்பி வைக்க வேண்டும். இதைதொடர்ந்து, காவல் துறை தலைமை இயக்குனர் தலைமையில், அக்., 30ல் குறைதீர் முகாம் நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X