ஒடிசாவில் படகு கவிழ்ந்து 'டிவி' செய்தியாளர் பலி

Added : செப் 26, 2021
Share
Advertisement
புவனேஸ்வர்:ஒடிசாவில் கட்டாக் நகர் அருகே, அதகர் காட்டில் இருந்து ஒரு யானை மகாநதி ஆற்றங்கரைக்கு வந்துள்ளது.இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் யானையை பார்க்க ஆற்றங்கரைக்கு வந்தனர். இதனால் பீதியடைந்த யானை, ஆற்றைக் கடக்க முயன்றது. அப்போது ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் நடுவே சிக்கிக் கொண்டது. இதையடுத்து, யானையை எதிர்புறத்தில் இருந்து துரத்தி, மீண்டும்

புவனேஸ்வர்:ஒடிசாவில் கட்டாக் நகர் அருகே, அதகர் காட்டில் இருந்து ஒரு யானை மகாநதி ஆற்றங்கரைக்கு வந்துள்ளது.இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் யானையை பார்க்க ஆற்றங்கரைக்கு வந்தனர். இதனால் பீதியடைந்த யானை, ஆற்றைக் கடக்க முயன்றது. அப்போது ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் நடுவே சிக்கிக் கொண்டது. இதையடுத்து, யானையை எதிர்புறத்தில் இருந்து துரத்தி, மீண்டும் ஆற்றங்கரைக்கு அனுப்ப, மீட்புக் குழுவினர் ஒரு படகில் சென்றனர்.அவர்களுடன் பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள் ஆகியோரும் சென்றனர். திடீரென ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில், 'ஒடியா டிவி' தலைமைச் செய்தியாளர் அரிந்தம் தாஸ் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவருடன் வந்த புகைப்பட நிபுணர் பிரவத் சின்கா உள்ளிட்ட இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X