திருவனந்தபுரம்;'ஆன்லைன்' விளையாட்டுகளுக்கு அடிமையான குழந்தைகளை மீட்க கேரள அரசு திட்டம் வகுத்துள்ளது.கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில்முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:தென் மாநிலங்களில் 126 போலீஸ் ஸ்டேஷன்கள்'சைல்ட் பிரண்ட்லி' எனப்படும் குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துபவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.அவற்றில் கேரளாவில் 20 ஸ்டேஷன்கள் உள்ளன. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஏராளமான குழந்தைகள் அடிமையாகி உள்ளனர். அவர்களை மீட்க 'டிஜிட்டல்' மீட்பு மையம் அமைக்கப்படும். இதன் வாயிலாக ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையான குழந்தைகளை மீட்டு மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இந்த டிஜிட்டல் மீட்பு மையத்தை போலீசாரே நிர்வகிப்பர்.இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE