சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கறுப்பு நிற தாள் கள்ளநோட்டாக மாறும்

Added : செப் 26, 2021
Share
Advertisement
வேலுார்:வேலுார் அருகே கறுப்பு நிற தாள்களில் ரசாயனம் தடவினால் கள்ள நோட்டுக்களாக மாறும் என 25க்கும் மேற்பட்டோரிடம் 5 கோடி ரூபாய் மோசடி செய்த ஆறு பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.வேலுார் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே கொல்லமங்கலத்தை சேர்ந்தவர் அசோக்குமார் 35 விவசாயி. இவரை பள்ளிகொண்டாவை சேர்ந்த மூர்த்தி 35 என்பவர் அணுகி தன் நண்பர் சரவணனிடம் கள்ளநோட்டுக்கள்

வேலுார்:வேலுார் அருகே கறுப்பு நிற தாள்களில் ரசாயனம் தடவினால் கள்ள நோட்டுக்களாக மாறும் என 25க்கும் மேற்பட்டோரிடம் 5 கோடி ரூபாய் மோசடி செய்த ஆறு பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.வேலுார் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே கொல்லமங்கலத்தை சேர்ந்தவர் அசோக்குமார் 35 விவசாயி. இவரை பள்ளிகொண்டாவை சேர்ந்த மூர்த்தி 35 என்பவர் அணுகி தன் நண்பர் சரவணனிடம் கள்ளநோட்டுக்கள் இருப்பதாகவும் அதை மாற்றினால் கோடீஸ்வரராக ஆகலாம் என ஆசைவார்த்தை கூறினார்.கறுப்பு நிறத்தில் உள்ள தாள்கள் மீது நாங்கள் கொடுக்கும் ரசாயனத்தை தடவினால் ஐந்து நிமிடத்திற்கு பின் கள்ள ரூபாய் நோட்டுக்களாக மாறி விடும் என கூறியுள்ளனர்.மேலும் ஒரு கறுப்பு நிற தாளில் ரசாயனம் தடவிய சிறிது நேரத்தில் அது 500 ரூபாய் நோட்டாக மாறியதை செய்து காண்பித்தார்.இதையடுத்து குடியாத்தம் செதுக்கரையிலுள்ள சரவணன் 40 என்பவரிடம் 1.50 லட்சம் ரூபாயை அசோக்குமார் கொடுத்து 1.50 கோடி ரூபாய் மதிப்புக்கு கறுப்பு நிற 60 பேப்பர் பண்டல்கள் ரசாயன பாட்டில்களை பெற்றார். வீட்டில் அவர்கள் கொடுத்த ரசாயனத்தை பேப்பர் கட்டுக்கள் மீது தடவினார். அவை கறுப்பு நிறத்திலேயே இருந்தன. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அசோக்குமார் குடியாத்தம் போலீசில் நேற்று புகார் செய்தார்.போலீசார் செதுக்கரையில் உள்ள சரவணன் வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு கறுப்பு நிற பேப்பர் கட்டுக்கள் ரசாயன பவுடர் பிளாஸ்டிக் கவர் கலர் ஜெராக்ஸ் மிஷன் கம்ப்யூட்டர் பேப்பர் வெட்டும் இயந்திரங்கள் இருந்தன. விசாரணையில் இதேபோன்று 25க்கும் மேற்பட்டோரிடம் 5 கோடி ரூபாய் வரை அவர் மோசடி செய்தது தெரியவந்தது. சரவணன் மூர்த்தி உள்ளிட்ட ஆறு பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X