அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொலைச் சம்பவங்கள் வருத்தமளிக்கிறது

Added : செப் 26, 2021
Share
Advertisement
காரைக்குடி:தமிழகத்தில் நடந்து வரும் தொடர் கொலைச் சம்பவங்கள் வருத்தம்அளிக்கிறது.இதனை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டுமென சிவகங்கை காங்., எம்.பி., கார்த்திகூறினார்.காரைக்குடி அருகே கண்டனுாரில் அவர் கூறியதாவது: சர்வ வல்லமை படைத்த உள்துறை அமைச்சர் இந்தியாவை பாதுகாக்கிறார் என்றுபிரசாரம் செய்யும் பா.ஜ., டில்லியில் நடந்த துப்பாக்கி சூட்டிற்கு பதில் சொல்ல

காரைக்குடி:தமிழகத்தில் நடந்து வரும் தொடர் கொலைச் சம்பவங்கள் வருத்தம்அளிக்கிறது.இதனை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டுமென சிவகங்கை காங்., எம்.பி., கார்த்திகூறினார்.காரைக்குடி அருகே கண்டனுாரில் அவர் கூறியதாவது: சர்வ வல்லமை படைத்த உள்துறை அமைச்சர் இந்தியாவை பாதுகாக்கிறார் என்றுபிரசாரம் செய்யும் பா.ஜ., டில்லியில் நடந்த துப்பாக்கி சூட்டிற்கு பதில் சொல்ல வேண்டும்.டில்லியின் பாதுகாப்புஎன்பது நேரடியாக உள்துறை அமைச்சரிடம்உள்ளது. டில்லி கோர்ட்டில் கொலை நடந்துள்ளது என்றால், அது நிர்வாகம் சீர்கெட்டுள்ளது என்பதை தான் குறிக்கும். இதற்கு பா.ஜ.,வும், மத்தியஅரசும் உரிய விளக்கமளிக்க வேண்டும்.தமிழகத்தில் தொடர் கொலைச் சம்பவங்கள் நடப்பது வருத்தமளிக்கிறது. ஸ்டாலின் நேரடியாக கவனித்து காவல்துறைக்கு ஆணையிட்டு இதுபோன்ற சம்பவங்கள்நடக்காமல் தடுக்கவேண்டும். கொலைச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X