பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக மாசு கட்டுப்பாடு வாரிய தலைவராக சுப்ரியா சாஹூ நியமனம்

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை: தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக சுப்ரியா சாஹூவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக இருந்த வெங்கடாச்சலம் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் கூறப்பட்டது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். உடனடியாக சென்னை கிண்டி, மாசு
தமிழ்நாடு, மாசுகட்டுப்பாட்டு, வாரிய தலைவர், சுப்ரியா சாஹூ, நியமனம்

சென்னை: தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக சுப்ரியா சாஹூவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக இருந்த வெங்கடாச்சலம் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் கூறப்பட்டது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். உடனடியாக சென்னை கிண்டி, மாசு கட்டுப்பாடு வாரியத்தில் உள்ள வெங்கடாச்சலத்தின் அலுவலகம், சென்னை வேளச்சேரி, புதிய தலைமைச் செயலக காலனி, 2-வது பிரதான சாலையில் உள்ள அவரது வீடு மற்றும் சேலம் அம்மம்பாளையத்தில் உள்ள அவரது வீடு மற்றும் உறவினர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.


latest tamil news


இந்த சோதனையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிக்கியுள்ள, ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ்., அதிகாரியும், மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான வெங்கடாசலத்தின் சொகுசு பங்களா, அலுவலகம் என, ஐந்து இடங்களில் 13.50 லட்சம் ரூபாய் ரொக்கம், 6.5 கிலோ தங்கம் மற்றும் சந்தரன மர பொருட்களை கைப்பற்றி உள்ளனர். இந்த மாதத்துடன் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்த நிலையில் வெங்கடாச்சலம், ஊழல் வழக்கில் சிக்கி உள்ளார்.

இந்நிலையில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளராக இருக்கும் சுப்ரியா சாஹூவுக்கு தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
26-செப்-202120:32:50 IST Report Abuse
sankaranarayanan மாசுக்களை அதகிகம் எங்கள் திராவிட கட்சிகளின் ஆட்சியில் இருக்கும் தொழிற்ச்சாலைகள் மாசுக்களை அதிகம் வெளியே விடுவதால், மூடப்படும் - மூடப்பட்டு வருகின்றன - புதிய தொழிற்சாலைகள் திறக்கப்படாது - ஏனென்றால் தொழிற்சாலைகளால் மாசு அதிகமாவதை தடுக்கிறோம் - நதிகள் தூர் வாராமல் காணாமல் போயிடும் - தெருக்கள் சுத்தம் செய்வது அறவே நின்றுவிடும் - கடற்கரையில் உள்ள மாசுக்கள் அகற்றப்படாது - இது மாதிரி காரியங்களால் எங்களது திராவிட ஆட்சி மலரும் - மாசு என்பது எங்களுடன் பிறந்ததுதான் அதை தவிர்க்க முடியாது - அதிகமாகாமல் தடுத்துவிடுவோம் எப்படி எங்களது ஆட்சி ?
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
26-செப்-202117:48:09 IST Report Abuse
Sivagiri மா.சு. - கட்டுப்படுத்தவா ?
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
26-செப்-202113:20:51 IST Report Abuse
duruvasar இவராவது நன்றாக செயல்பட்டு தமிழ்நாட்டில் எங்ககேயும் சாலைகளோ, தொழிற்சாலைகளோ வராமல் கவனத்துடன் செயல்பட்டு மாசுவை கட்டுபடுத்த நடவடிக்கைகள்.மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் இப்போ இருக்கிற எதிர்கட்சி பிரயோசனம் கிடையாது. கடந்த ஆட்சியின் போது எதிர்க்கட்சியும் அவர்கள் தோழமை கட்சிகளும் தீயாக வேலை செய்து தமிழகத்தின் சுற்றுச்சூழலை காபப்பாற்றி முதன்மை மாநிலமாக வைத்திருந்தனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X