பொது செய்தி

தமிழ்நாடு

‛பணம் காய்க்கும் ' மரம் தெரியுமா: ஐடியா சொல்லும் 'வனதாசன்'

Added : செப் 26, 2021
Share
Advertisement
'வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்' வாசகங்களை பார்த்திருப்போம். மரம் வளர்ப்பது சமூக கடமை என்றால் யாரும் வளர்க்க முன் வருவதில்லை. இந்த மரத்தை வளர்த்தால் பணம் கிடைக்கும் என்று கூறினால் ஆர்வமுடன் முந்தியடித்து வருவர். இவர்களுக்கு மரம் வளர்ப்பதன் அவசியம், பணம் காய்க்கும் மரங்களை வளர்ப்பது எப்படி, அதன் மூலம் வருவாய் ஈட்டுவது எப்படி என்று 'அலைபேசி' வாயிலாக
‛பணம் காய்க்கும் ' மரம் தெரியுமா: ஐடியா சொல்லும் 'வனதாசன்'


'வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்' வாசகங்களை பார்த்திருப்போம். மரம் வளர்ப்பது சமூக கடமை என்றால் யாரும் வளர்க்க முன் வருவதில்லை.

இந்த மரத்தை வளர்த்தால் பணம் கிடைக்கும் என்று கூறினால் ஆர்வமுடன் முந்தியடித்து வருவர். இவர்களுக்கு மரம் வளர்ப்பதன் அவசியம், பணம் காய்க்கும் மரங்களை வளர்ப்பது எப்படி, அதன் மூலம் வருவாய் ஈட்டுவது எப்படி என்று 'அலைபேசி' வாயிலாக இலவச ஆலோசனைகளை கொடுக்கிறார் திண்டுக்கல் முன்னாள் உதவி வனப்பாதுகாவலர் 'வனதாசன்' இரா.ராஜசேகரன்.

தினமலர் வாசகர்களுக்காக அவர் கூறிய ஆலோசனைகள்: மரங்கள் இயற்கை வளம், சுற்றுச்சூழலுக்கும் உயிரினங்களின் வாழ்வுக்கும் முக்கிய பங்காற்றுகின்றன. தேசிய வனக் கொள்கைப்படி, நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 33 சதவிகிதம் பசுமை போர்வை இருக்க வேண்டும். அப்போது தான் நன்கு மழை பெய்யும். ஆனால் தமிழ்நாட்டில் பசுமை போர்வை பரப்பு 21.76 சதவிகிதம்தான் உள்ளது. இதை அதிகரிக்க காடுகள் மட்டுமின்றி, தனியார் நிலங்கள், ரோட்டோரம், ரயில் பாதையோரம், ஆற்றுப்படுகை, வீடுகள், கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்களில் கட்டாயம் மரம் வளர்க்க வேண்டும்.

விவசாயிகள் வெறுமனே உணவுப் பயிர்களை சாகுபடி செய்தால் நிலத்தடி நீர் மட்டம் பெருகுவது இல்லை. மரங்கள் நிறைந்த வேளாண் காடுகளை வளர்த்தால், நிலத்தடி நீர்மட்டம் பெருகுவதோடு, அதிக வருமானமும் ஈட்டலாம். குறுகிய காலத்தில் சவுக்கு, தைலமரம், பெருமரம், மலை வேம்பு வளர்க்கலாம். இவற்றை 6 ஆண்டுகளில் அறுவடை செய்து பணம் பார்க்கலாம்.

மரங்களுக்கு நடுவே ஊடுபயிராக உளுந்து, கடலை, வெங்காயம், கத்தரி, தக்காளி பயிரிட்டால் இன்னொரு வருமானமும் பார்க்கலாம். நீண்ட கால சாகுபடியெனில் தேக்கு, குமிழ், சந்தனம், வேங்கை, செஞ்சந்தனம் மரங்களை வளர்க்கலாம். 12 முதல் 20 ஆண்டுகளில் ஒரு பெருந்தொகையை லாபமாக பார்க்கலாம்.

உதாரணத்திற்கு இருபது ஆண்டுகளான ஒரு செஞ்சந்தனம் மரம், வளர்ச்சி, தரத்தை பொறுத்து அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை விலை போகும். ஒரு ஏக்கரில் 400 மரங்கள் நடவு செய்து அதில் 100 மரங்கள் மட்டுமே நன்கு வளர்ந்தால் கூட, ஒரு மரத்தை ஒரு லட்சத்திற்கு விற்றாலும் ரூ.ஒரு கோடி வருமானம் கிடைக்கும். 2010ல் திருப்பத்துாரில் அரசு சந்தன கிடங்கில் நடந்த ஏலத்தில் ஒரு டன் 'சி' கிரேடு செஞ்சந்தன மரம், ரூ.6.55 லட்சத்திற்கு விலைப்போனது, என்றார்.
இவரின் ஆலோசனை பெற 94424 05981 ல் பேசலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X