பொது செய்தி

தமிழ்நாடு

மோர்சிங் ‛விசிலிங்'கில் சாதிக்கும் சாப்ளின் சுந்தர்

Added : செப் 26, 2021
Share
Advertisement
இன்றைய இளைஞர்கள் தங்களுக்கு பிடித்த துறைகளை தேர்வு செய்து அவற்றில் புகழ் பெற்று, பலவித சாதனைகளையும் நிகழ்த்தி வருகின்றனர். அந்தவகையில் அருப்புக்கோட்டை அருகே பெருநாழி கிராமத்தை சேர்ந்த சாப்ளின் சுந்தர் 27, இசை கருவிகளை வாசிப்பதில் ஆர்வம் ஏற்பட்டு அதை கற்று கொள்ள முடிவு செய்தார். இதற்காக திருச்சி கலை காவிரி நுண்கலை கல்லுாரியில் மிருதங்கம் வாசிக்க கற்று அதில்
மோர்சிங் ‛விசிலிங்'கில் சாதிக்கும் சாப்ளின் சுந்தர்

இன்றைய இளைஞர்கள் தங்களுக்கு பிடித்த துறைகளை தேர்வு செய்து அவற்றில் புகழ் பெற்று, பலவித சாதனைகளையும் நிகழ்த்தி வருகின்றனர்.

அந்தவகையில் அருப்புக்கோட்டை அருகே பெருநாழி கிராமத்தை சேர்ந்த சாப்ளின் சுந்தர் 27, இசை கருவிகளை வாசிப்பதில் ஆர்வம் ஏற்பட்டு அதை கற்று கொள்ள முடிவு செய்தார். இதற்காக திருச்சி கலை காவிரி நுண்கலை கல்லுாரியில் மிருதங்கம் வாசிக்க கற்று அதில் பட்டமும் பெற்றுள்ளார்.

கல்லுாரியில் உள்ள பழங்கால இசை கருவிகளை பார்த்து, அதில் பயன்படுத்தாமல் இருந்த மோர்சிங் கருவியை வாசிக்க ஆர்வம் கொண்டார். அங்குள்ள பேராசிரியர்கள் இது தொன்மை வாய்ந்ததும், வாசிப்பது கஷ்டமாகவும் இருக்கும், நாக்கில் காயம் ஏற்படும் என்றும் கூறி உள்ளனர். இருப்பினும், அதில் வாசிக்க ஆர்வம் கொண்டு பயிற்சி எடுத்து இதில் ஓரளவு தேர்ச்சியும் பெற்றுள்ளார்

இவருக்கு சிறு வயதிலிருந்தே விசில் அடிப்பது வழக்கம். இவர் விசில் அடித்தால் பெற்றோர் முதல் ஊர்மக்கள் அனைவரும் திட்டி தீர்ப்பர். அதை கெட்ட பழக்கம் என்பர். விசில் மூலம் பாட பயிற்சி எடுத்து திட்டுபவர்கள் வாயாலேயே பாராட்டு பெறுவதை உறுதியாக கொண்டு, விசிலில் பாட்டு பாடவும் பயிற்சி எடுத்தார். இன்றைக்கு பல மேடை, கல்லுாரிகள் நிகழ்ச்சிகளிலும் விசில் மூலம் பாடி பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார். இவருக்கு நன்கு பாடவும் வரும்.

ஒருசில படங்களிலும் நடித்து உள்ள சாப்ளின்சுந்தர் மனம் திறந்ததாவது...மோர்சிங் வாசிக்கும்போது சிறிது தப்பினாலும் நாக்கு துண்டாகி விடும். விடாமல் பயிற்சி எடுத்து கற்று கொண்டேன். தற்போது இக்கருவி மூலம் பல நிகழ்ச்சிகளில் வாசித்து உள்ளேன். கர்நாடகா இசையில் மோர்சிங் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது நான் குட்டியாக ஒரு இசை கருவியை கண்டு பிடித்து வாசிக்கிறேன். இதை வெளிநாட்டில் கஜூ என்பர். இதற்கு தமிழில் நான் பீபீ என பெயர் வைத்துள்ளேன்.
முன்பு பூவரச இலையை மடித்து ஊதுவர். பப்பாளி தண்டை வைத்து ஊதி விளையாடுவோம். அதுபோல் இக் கருவியை கட்டை பைகளில் உள்ள கைப்பிடிகளை பயன்படுத்தி செய்து உள்ளேன். வாசிக்க எளிது. அனைத்து பாட்டுகளையும் பாட முடியும். இன்னும் கலை துறைகளில் சாதிக்க நிறைய கனவு உள்ளது, என்றார்.

இவர், திரைப்பட நகைச்சுவை நடிகர் 'ஹலோ' கந்தசாமியின் மகன் என்பது குறிப்பிட தக்கது.இவரை வாழ்த்த 96881 09010

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X